கந்தல் சேலையை விரித்தபடி, கோவில் வாசலில் படுத்திருந்தார் மூதாட்டி.
வயிறு வற்றி, கண்கள் ஒடுங்கி, சுருண்டு கிடந்தார்.
கையில் இருந்த சில்லறையை வீசி சென்றனர் சிலர்.
ஒவ்வொரு முறை நாணயம் விழும் போதும், 'கினிங்க்' சத்தம் கேட்டு, மெதுவாக கண் திறப்பார்; மீண்டும் மூடியபடி அசைவின்றி கிடந்தார் மூதாட்டி.
துாரத்தில் நின்று இதை கவனித்தான் சிறுவன் ராமன்.
மூதாட்டி அருகில் மெதுவாக சென்றான். சுற்றும் முற்றும் பார்த்தான்; சிதறி கிடந்த சில்லறையை பொறுக்கி எடுத்தபடி வேகமாய் ஓடினான்.
சிலர், அவனை பிடிக்க முயன்று தோற்றனர்.
சிறிது நேரத்திற்கு பின், மூதாட்டி அருகில் வந்தான் ராமன்.
''எழுந்து உட்காருங்கள்...''
குரல் கொடுத்தான்.
கையில் உணவு பொட்டலமும், தண்ணீர் புட்டியும் இருந்தது.
மூதாட்டிக்கு கை கொடுத்து துாக்கி அமர வைத்தான்.
உணவுப் பொட்டலத்தை பிரித்து சாப்பிட வைத்தான்.
பசியாறிய மூதாட்டிக்கு, தெம்பு வந்தது. மகிழ்ச்சியில், மலர்ந்த கண்கள் கண்ணீர் சொரிந்தன.
தேவை அறிந்து உதவிய சிறுவன் தலையை வருடினார் மூதாட்டி.
மனநிறைவுடன் புறப்பட்டான் ராமன்.
பட்டூஸ்... ஒருவரின் தேவை உணர்ந்து, செயல்படுவது தான் புத்திசாலித்தனம்!
பூபதி பெரியசாமி