Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சூழ்நிலை ஆபத்து!

சூழ்நிலை ஆபத்து!

சூழ்நிலை ஆபத்து!

சூழ்நிலை ஆபத்து!

PUBLISHED ON : ஏப் 27, 2024


Google News
Latest Tamil News
துாத்துக்குடி மாவட்டம், வேம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1989ல், 10ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக இருந்தார் முத்துராமலிங்கம். பள்ளியில் மதியம் வரிசையில் நின்று சத்துணவை வாங்கி வராண்டாவில் அமர்ந்து சாப்பிடுவோம்.

அன்று, சாம்பாரில் இருந்த காய்கறியை சாப்பிடாமல் நடைபாதையில் போட்டு சென்று விட்டான் ஒருவன். அதே இடத்தில் அமர்ந்திருந்த நானும் சாப்பிட்டு வகுப்பிற்கு சென்றேன்.

வராண்டாவில் காய்கறி கழிவு குவிந்திருப்பதை கண்ட வகுப்பாசிரியர் கோபமாக, 'எவன்டா இங்கே உட்கார்ந்து சாப்பிட்டது...' என கேட்டார். எல்லாரும் என்னை சுட்டிக் காட்டினர். மிகுந்த ஆத்திரத்தில், 'சாப்பிட்ட இடத்தில் எச்சிலை எடுக்க மாட்டாயா...' என அடித்து தண்டித்தார். கண்டிப்புடன் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட சொன்னார்.

மறுநாள், சமையல் அறையில் விசாரித்து உண்மை அறிந்த ஆசிரியர், 'அடிக்கிறதுக்கு முன்னாடி விபரத்தை சொல்லி இருக்கலாமே...' என்று கேட்டார். பதற்றமின்றி, 'கடும் கோபத்தில் இருந்தீங்க ஐயா... நான் சொல்வதை கேட்கும் மனநிலையில் நீங்கள் அப்போது இல்லை...' என்று விளக்கம் அளித்தேன்.

நெகிழ்வுடன், 'அவசரத்தில் தீர விசாரிக்காமல் தண்டித்து விட்டேன். மன்னித்து விடு...' என முதுகில் தட்டிக் கொடுத்தார். ஆதரவாக உணர்ந்தேன்.

என் வயது, 51; எட்டையபுரம், ராமனுாத்து ஆரம்ப பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். சந்தர்ப்ப சூழ்நிலை, ஒருவனைக் குற்றவாளியாக காட்டி விடும் என, அந்த சம்பவத்தில் இருந்து கற்றேன். அந்த பாடத்தை மனதில் பதித்து மாணவர்களுடன் பழகி, பள்ளியை நிர்வகித்து வருகிறேன்.

- கே.இப்ராகிம், துாத்துக்குடி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us