விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இந்து நாடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்,1956ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
அன்று பள்ளி மைதானத்தில் விளையாடிய போது, விரலில் அணிந்திருந்த தங்க மோதிரம் தொலைந்து விட்டது. தோழியர் துணையுடன் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் பிரார்த்தனை கூட்டத்தில், 'யாராவது கண்டு எடுத்தால் கொடுத்து விடுங்கள்...' என்று அறிவிப்பு வெளியிட்டார் தலைமை ஆசிரியர். காவலாளி சீனிவாசனிடமும் விபரம் கூறியிருந்தார்.
அன்று மாலை, காவலாளியுடன் சேர்ந்து தேடினேன். மோதிரத்தை கண்டு எடுத்து அவர் பையில் வைத்ததை பார்த்து விட்டேன். இது அவருக்கு தெரியாததால் சற்று நேரம் தேடியது போல் நடித்து, 'கணோம் பாப்பா... நாளை தேடுவோம்...' என அனுப்ப முயன்றார். அழுதபடியே, 'அம்மா அடிப்பாங்க. பயமாய் இருக்கு தாத்தா...' என்றேன்.
உடனே, 'இன்னும் சிறிது நேரம் தேடுவோம்...' என பாவனை செய்தபடி, 'இதோ கிடைத்து விட்டது...' என்று கூறி என் கையில் கொடுத்தார். பள்ளி நிர்வாகத்திடம், காவலாளி கண்டுபிடித்து தந்ததாக அவருக்கு பெருமை சேர்த்தேன்.
தற்போது எனக்கு, 77 வயதாகிறது; பள்ளியில் என் கண்ணீர் கண்டு காவலாளிக்கு ஏற்பட்ட கனிவான மன மாற்றம் வியப்பு தருகிறது. மோதிரம் அணியும் போதெல்லாம் அந்த நிகழ்வு, நினைவை ஆக்கிரமித்துக்கொள்கிறது.
- சுதந்திரதேவி, சிவகாசி.