திருச்சி, செயின்ட் ஜோசப் பள்ளியில், 1998ல், 8ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியராக இருந்த அருட்தந்தை ஜோ.லாரன்ஸ், கண்டிப்பையும், பேரன்பையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்டார்.
முழு ஆண்டு தேர்வுக்கு முன், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பொது தேர்வுக்கு தயாராகி வந்தோம். விடுமுறை விட்டிருந்தாலும் பள்ளி வளாகத்தில், மர நிழலில் அமர்ந்து படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். வீட்டில் இருந்தால், கடை வேலைகளில் அமர்த்தி விடுவர் என்ற பயத்தால் அவ்வாறு செய்து வந்தேன்.
அன்று பள்ளி வளாகத்தை நோட்டமிட்ட படி வந்தார் தலைமையாசிரியர். மரத்தடியில் அமர்ந்திருந்த என்னை அடையாளம் கண்டு, 'வீட்டில் படிக்க வசதி இல்லை என்றால், 'போர்டிங்'கில் சேர்ந்து, மாலை வரை படித்து செல். தனியாக, மேஜை, நாற்காலி, மின்விசிறி வசதி செய்து தருகிறேன்...' என்றார். மகிழ்ச்சியில், சல்யூட் செய்தேன்; தோளில் தட்டி வாழ்த்தினார்.
பொது தேர்வில், கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கி இருந்தேன். மேடைக்கு அழைத்து பதக்கம் அணிவித்து பாராட்டியவரிடம், 'இது உங்களால் கிடைத்தது...' என நெகிழ்ந்தேன். பெருந்தன்மையுடன், 'உன் உழைப்பும், புத்திசாலித்தனமும் தான் காரணம்...' என்றார்.
என் வயது, 38; கமிஷன் மண்டித் தொழில் செய்து வருகிறேன். உதவுவதால் ஏற்படும் மகிழ்ச்சியையும், எதிர்ப்பார்ப்பு இல்லா பெருந்தன்மையையும், அந்த தலைமையாசிரியரிடம் கற்று, வாழ்வில் பேணி வருகிறேன்.
- அ.பா.சிவானந்தம், திருச்சி.
தொடர்புக்கு: 99444 57752