மயிலாடுதுறை, அரசு நடுநிலைப் பள்ளியில், 1968ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தலைமை ஆசிரியராக இருந்த வீராச்சாமி அன்பாக பழகுவார்; கருணை உள்ளம் உடையவர். தாயை இழந்த வகுப்பு நண்பன் மாணிக்கம், சிறிய குடிசை வீட்டில் வசித்து வந்தான். கூலி வேலை செய்த அவன் தந்தை, படிப்புக்கு உதவி வந்தார். திடீரென நோய்வாய்பட்டு இறந்தார்.
நண்பனை ஆதரிக்க உறவினர் யாரும் இல்லை. தலையில் இடி விழுந்தது போல், மீள முடியாமல் அழுது புலம்பினான்.
அவனை ஆறுதல் படுத்திய பின், தலைமை ஆசிரியரிடம் சென்றோம். தந்தை இறப்பால், நண்பனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எடுத்து கூறினோம். ஆதரவு இன்றி தவித்தவனுக்கு, உடனடியாக உதவ முன் வந்தார் தலைமை ஆசிரியர். ஆசிரியர்களிடம் பணம் திரட்டி, இறுதி சடங்கை முறைப்படி நடத்தி முடித்தார். அவரது சேவை மனதை தொட்டது.
என் வயது, 67; தனியார் நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்றேன். மனித நேயத்துடன் உதவிய அந்த தலைமை ஆசிரியரை தெய்வமாக மதித்து வணங்கி வருகிறேன்.
- டி.எஸ்.ராஜசெல்வன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 93602 66439