PUBLISHED ON : ஜன 06, 2024

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு, கம்பு மாவு - தலா 1 கப்
தினை மாவு - 0.5 கப்
தேங்காய் - 50 கிராம்
கேரட் - 2
பச்சை மிளகாய் - 4
கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காய பொடி - சிறிதளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு மாவு, கம்பு மாவு, தினை மாவை தனித்தனியாக வறுக்கவும். கேரட்டை துருவி வதக்கவும். வாணலியில், எண்ணெய் சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயப் பொடி தாளித்து, மாவுகளை சேர்க்கவும்.
பின், துருவிய தேங்காய், வதக்கிய கேரட், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும். அதை கொழுக்கட்டையாக பிடித்து, இட்லி தட்டில் வேக வைக்கவும். ஆரோக்கியம் தரும், 'சிறுதானிய கொழுக்கட்டை' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- வி.கமலி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 91598 96695