Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/துணுக்கும் முக்கியம்!

துணுக்கும் முக்கியம்!

துணுக்கும் முக்கியம்!

துணுக்கும் முக்கியம்!

PUBLISHED ON : மே 24, 2025


Google News
Latest Tamil News
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசுப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...

வகுப்பில் பாடங்கள் படிப்பதுடன், பொது அறிவுக்கான புத்தகங்களையும் படிப்பேன். இந்த பழக்கத்தால் பத்திரிகைகளுக்கு துணுக்கு, தமாசு எழுதும் ஆசை ஏற்பட்டது. அதன்படி முயன்று, ஒரு நாளிதழுக்கு தமாசு எழுதி அனுப்பினேன். சில நாட்களில் பிரசுரமாகி சன்மானத் தொகையாக, இரண்டு ரூபாய் கிடைத்தது. அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

விபரம் அறிந்த தமிழாசிரியர் நடராஜன், 'இப்போது படிப்பு தான் முக்கியம்; படித்து முடித்த பின், ஒரு வேலையைத் தேடிக்கொள். அதற்கு தேவையான பொது அறிவு திறனை வளர்த்துக்கொள். பின், பத்திரிகைகளுக்கு எழுதும் ஆசை தானாக நிறைவேறும்...' என அறிவுரைத்தார். அதை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தினேன். பயிற்சி பெற்று ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.

என் வயது, 74; பள்ளி தலைமையாசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றேன். பத்திரிகைகளில் சிறுகதை, கட்டுரை, தமாசு, துணுக்குகள் எழுதி வருகிறேன். அவை பிரசுரமாகும் போதெல்லாம் வகுப்பில் அறிவுரை வழங்கிய தமிழாசிரியர் நடராஜன் நினைவை போற்றுகிறேன்!

- ஆர்.தனபால், சென்னை.

தொடர்புக்கு: 98409 72340






      Our Apps Available On




      Dinamalar

      Follow us