Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பசுமை நிறைந்த..

பசுமை நிறைந்த..

பசுமை நிறைந்த..

பசுமை நிறைந்த..

PUBLISHED ON : மே 24, 2025


Google News
Latest Tamil News
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்.உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 11ம் வகுப்பு படித்தேன். ஆண்டு இறுதி பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அன்று காலை இறை வணக்க கூட்டத்தில் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் ஒவ்வொருவரும் வகுப்பில் நினைவில் நின்ற நிகழ்வுகளை நெகிழ்வுடன் பகிர்ந்தோம்.

பின், பள்ளி வளாகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றனர் ஆசிரியர்கள். திரும்பியதும் மேடையில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலவிதமாய் திறமையை காட்டினர் மாணவர்கள்.

எங்கள் வகுப்பில் அனைவரும் மேடையில் குழுமி, 'பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே... பறந்து செல்கிறோம்...' என உருக்கமாக பாடினோம். பார்வையாளர் பகுதியில் அமர்திருந்தோரும் இணைந்து பாடியது கண்களை குளமாக்கியது.

எனக்கு, 71 வயதாகிறது. சொந்தமாக அச்சு தொழில் செய்து ஓய்வு பெற்றேன். ஒவ்வொரு ஆண்டும் இறுதித்தேர்வு எழுத செல்லும் மாணவச் செல்வங்களை காணும் போது, பள்ளி பிரிவுபசார விழாவில் பாடியது நினைவில் வந்து நெகிழ்வு ஏற்படுத்துகிறது.

- கே.ஜெகதீசன், சிவகாசி.

தொடர்புக்கு: 97899 32469






      Our Apps Available On




      Dinamalar

      Follow us