Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தனித்துவம்!

தனித்துவம்!

தனித்துவம்!


PUBLISHED ON : ஜூன் 14, 2025

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு ஆண்கள் பள்ளியில், 1974ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, கணித ஆசிரியராக இருந்தார் வேணுகோபால்.

தனித்துவ திறனுடன் பாடங்களை விளக்குவார். பொறுமையை கடைபிடித்து கற்றுக்கொடுப்பார்.

பாடங்களை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் அரையாண்டு கணித தேர்வில், 12 மதிப்பெண்களே பெற்றிருந்தேன். இதனால் மனமுடைந்து ஆர்வம் குன்றி திரிந்தேன். என்னை பரிவுடன் அழைத்து, 'பயமுறுத்தும் பாடமல்ல கணிதம்; முறைப்படி அணுகினால் ஜொலிக்கலாம்...' என அறிவுரைத்து தக்க பயிற்சிகள் தந்து நம்பிக்கையூட்டினார். இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தேன். பொதுத்தேர்வில், 83 மதிப்பெண்கள் பெற்று உயர்ந்தேன்.

என் வயது, 65; அரசு உதவி பெறும் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் என் வகுப்பறை அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து உயர்வதற்கு உற்சாகப்படுத்தியுள்ளேன். திறமையை துாண்டி வாழ்வில் வழிகாட்டிய கணித ஆசிரியர் வேணுகோபால் பாதங்களில் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்!

- எஸ்.பாலசுப்ரமணியன், காஞ்சிபுரம்.

தொடர்புக்கு: 63836 53400


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap