Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒழுக்க கல்வி!

ஒழுக்க கல்வி!

ஒழுக்க கல்வி!

ஒழுக்க கல்வி!

PUBLISHED ON : ஜூலை 05, 2025


Google News
Latest Tamil News
சென்னை அருகே கோவூர் சோமசுந்தரம் செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 1960ல் வரலாறு ஆசிரியராக பணியில் சேர்ந்தவுடன், மாணவர்களுக்கு ஒழுக்கம், கீழ்படிதல் போன்ற பண்புகள் வளர விடாமுயற்சி எடுத்தேன். பள்ளியில், என்.சி.சி.,என்ற தேசிய மாணவர் படை உருவாக்க ஈடுபாடு காட்டினேன். சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் என்.சி.சி., இயக்குனரை சந்தித்து திட்டத்தை சமர்ப்பித்தேன்.

அதற்கு அனுமதி தந்ததுடன் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பும் எனக்கே கிடைத்தது.

அதன்படி, செகந்திரபாத் நகரில் பயிற்சி பெற்ற பின் படையை உருவாக்கினேன். தொடர்ந்து, 10 ஆண்டுகள் திறம்பட பொறுப்பை வகித்து வழிநடத்தினேன். ஒருமுறை ஆண்டுவிழாவுக்கு அப்போதைய போலீஸ் எஸ்.பி., பொன்.பரமகுருவை அழைத்து, 'உழைப்பின் அருமை, நேர்மையாக வாழ்வது போன்ற குணங்களை மாணவர்களுக்கு போதிக்க, தங்கள் சிறப்பு விருந்தினராக வருவதே பொருத்தமாக இருக்கும்...' என கூறினேன்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கி, 'ஒழுக்கத்துடன் கூடிய கல்வி தான் சிறந்த சொத்து. அதை யாரும் திருட முடியாது. அது தான் சமுதாயத்தில் அந்தஸ்து பெற்று தர வல்லது...' என அவர் ஆற்றிய உரை பெரும் உத்வேகம் தந்தது.

என் வயது, 90; தமிழக கல்வித்துறையில் அதிகாரியாக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். மாணவர்களின் ஒழுக்கத்தை வளர்க்க எடுத்த முயற்சிகள், என் வாழ்வை அர்த்தமுள்ளதக்குவதாக எண்ணி மகிழ்கிறேன்.

- பி.வி.மணி, திருவள்ளூர்.

தொடர்புக்கு: 94440 45043






      Our Apps Available On




      Dinamalar

      Follow us