Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு: விண்ணில் வளருமா தாவரம்!

அதிமேதாவி அங்குராசு: விண்ணில் வளருமா தாவரம்!

அதிமேதாவி அங்குராசு: விண்ணில் வளருமா தாவரம்!

அதிமேதாவி அங்குராசு: விண்ணில் வளருமா தாவரம்!

PUBLISHED ON : ஏப் 05, 2025


Google News
Latest Tamil News
விண்ணில் தாவரம் வளரும் சூழல் பற்றி வியப்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர், 'போயிங் ஸ்டார்லைனர்' என்ற விண்கலத்தில் ஜூன் 5, 2024ல் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றனர். ஆய்வுகளை முடித்து எட்டு நாட்களில் திரும்ப திட்டமிட்டிருந்தனர். விண்கலத்தின் உந்து விசை அமைப்புகள் செயலிழந்ததால் பூமி திரும்புவது தாமதமானது.

பாதுகாப்பு கருதி, அந்த விண்கலத்தை தவிர்த்தது அமெரிக்க ஆய்வு நிறுவனமான நாசா. இருவரும் தொடர்ந்து அங்கு தங்கி ஆய்வுகள் செய்ய திட்டம் வகுத்தது. அதன்படி, 286 நாட்கள் தங்கி ஆய்வு நடத்தியதுடன், விண்வெளி நடையிலும் ஈடுபட்டனர். விண்வெளியில் தாவரம் வளர்ப்பது உட்பட, 150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் மனிதகுல மேன்மைக்கு அடிப்படையாக உடையவை.

இந்த விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள வீரர் சுனிதா, அமெரிக்கா, ஓஹியோ மாநிலத்தில் பிறந்தவர். தந்தை தீபக் பாண்டியா, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை பூர்வீகமாக கொண்டவர். தாய் உர்சுலின் போனி, மத்திய ஐரோப்பாவை பூர்வீகமாக உடைய அமெரிக்கர்.

அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர் சுனிதா; விமானியாக, 30 வகை விமானங்கள் இயக்கியுள்ளார். அவற்றில், 2700 மணி நேரம் பறந்து அனுபவம் பெற்றுள்ளார். விண்வெளி ஆய்வுக்கு, 1998ல் இவரை தேர்வு செய்தது, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

மூன்று முறை விண்வெளி பயணம் செய்துள்ளார்; ஒன்பது முறை விண்வெளியில் நடந்து ஆய்வு செய்துள்ளார். விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கிய முதல் பெண் என பெருமையும் பெற்றுள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போதே...

* அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தது

* கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடியது

* குடும்பத்தினருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியது

* செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியது போன்ற புகழ்க்கொடிகளை நாட்டியுள்ளார் சுனிதா.

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்ததால் சுனிதாவின் உடல் இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும். புவி ஈர்ப்பு விசையுடன் வாழ மீண்டும் பழக வேண்டும். அதற்கு தக்க உடற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் நடக்கும் ஆய்வுகள் மேம்பட்டால் உலகில் பெரும் மாற்றங்கள் நிகழும்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us