sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : மார் 26, 2026 07:36 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2026 07:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. கழிவாக வீசப்படும் நிலக்கடலைத் தோலிலிருந்து உயர்தர கிராபீனை தயாரிக்கும் முறையை நியூ சவுத் வேல்ஸ் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேதிப்பொருட்கள் இன்றி 'மின்னல் வேக வெப்பமூட்டல்' மூலம் கார்பனை மறுசீரமைக்கும் இம்முறை, பேட்டரி தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும்.

Image 1554171


2. தாவரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன என்ற பாடப்புத்தக விளக்கம் தவறாக இருக்கலாம் என்கின்றனர் பின்லாந்திலுள்ள துர்கு பல்கலை ஆய்வாளர்கள். குளோரோபில் ஒளியைப் பிரதிபலிப்பதை விட, இலையின் உள் கட்டமைப்பில் ஒளிச் சிதறல் ஏற்படுவதே இதற்குக் காரணம். இலைகள் மிகக் குறைவாகவே பச்சை ஒளியை பிரதிபலிக்கின்றன. ஆனால், நமது கண்களின் அதிகப்படியான உணர்திறன் காரணமாகவே அவை அடர் பச்சையாகத் தெரிகின்றன.

Image 1554172


3. செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கான மின்சாரப் பயன்பாட்டை 70 சதவீதம் வரை குறைக்கும் நுண்-மின்னணுச் சில்லை கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். மனித மூளையிலுள்ள நியூரான்களைப் போலவே இச்சில்லு ஒரே இடத்தில் தகவல்களைச் சேமிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் வல்லது.

Image 1554173


4. அப்போலோ விண்கலம் நிலவிலிருந்து கொண்டுவந்து, பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலவுக் கற் பாறைகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் கந்தக ஐசோடோப்புகள் இருப்பது தெரியவந்தது. இது, நிலவில் ஒரு காலத்தில் வளிமண்டலம் இருந்து, அதன் உட்பகுதியில் தனிமங்கள் வேதிவினை நிகழ்த்தியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Image 1554174


5. மனித முடியை விட ஆயிரம் மடங்கு மெல்லிய, 40 நானோமீட்டர் தடிமனுள்ள அடுக்கில் ஒளியைச் சிறைபிடித்து வார்சா பல்கலை விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். மாலிப்டினம் டைசெலினைடு தாள்களைப் பயன்படுத்தி இந்த ஒளிப் பொறியை உருவாக்கியுள்ளனர். இது மின்னணுக் கருவிகளுக்குப் பதிலாக அதிவேக ஒளிமின்னணுக் கணினிகள் மற்றும் நுண்-ஒளியியல் கருவிகள் உருவாக்க புதிய வழியைத் திறந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us