Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
1. அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.

Image 1424283


2. பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை 'இரட்டைக்கோள்கள்' என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

Image 1424284


3. உலகின் மிக சோம்பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'. தற்போது இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை கிடைத்த இவற்றின் தொல் எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய யானை அளவு பெரிய ஸ்லாத்கள் வாழ்ந்துள்ளன என்கிறார்கள். இவை சராசரியாக 3.63 டன் எடை கொண்டிருந்தனவாம்.

Image 1424285


4. ஆசிய யானைகளை விட அளவில் பெரியவை ஆப்பிரிக்க யானைகள். சமீபத்தில் ஆய்வு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த பெர்லின் பல்கலை ஆய்வாளர்கள் இரு யானைகளின் மூளையையும் ஒப்பீடு செய்தார்கள். இதில் ஆசிய யானைகளின் மூளை ஆப்பிரிக்க யானைகளின் மூளையை விடப் பெரிதாக இருப்பது தெரியவந்துள்ளது.

Image 1424286


5. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், நம் உடல் செல்கள் ஆரோக்கியமாக இயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பெர்ரி, ரோஸ்மேரி கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us