PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

தகவல் சுரங்கம்
தனித்துவமான தீவு
யூனியன் பிரதேசமான அந்தமானில் உள்ள பல தீவுகளில் ஒன்று வடக்கு சென்டீனல். பரப்பளவு 60 சதுர கி.மீ. இங்கு பூர்வ பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். எவ்வித சமூக, வெளியுலக தொடர்பு இல்லாமல் வாழும் உலகின் ஒரே இனம் என கருதப்படுகிறது. இது இந்திய எல்லைக்குள் இருந்தாலும், அங்கு செல்ல, யாருக்கும் அரசு அனுமதி இல்லை. இவர்களும் தீவில் இருந்து வெளியே வருவதில்லை, மற்ற வெளிநபர்களையும் அனுமதிப்பதில்லை. மீறி சென்றால் அம்பு ஏவி தாக்குவர். பழங்கால உடை அணிகின்றனர். மீன், தேங்காய், தேன் உள்ளிட்டவையே இவர்களின் உணவு.