PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

தகவல் சுரங்கம்
நண்பர்கள் தினம்
அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது. அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., ஜூலை 30ஐ உலக நண்பர்கள் தினமாக அறிவித்தது. ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆக., முதல் ஞாயிறு (ஆக. 4) நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.