/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM

மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலை, 5 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை ஒட்டி செங்குன்றம், இந்திரா நகர், அலமேலுமங்காபுரம், நரசிங்கபுரம் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட வீடுகள், இரண்டு தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன.
நாளுக்கு நாள் வீடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சாலை மெல்ரோசாபுரம் -- மருதேரி சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்டவை, இச்சாலையில் அதிக அளவில் சென்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலை குறுகலாகவும், வளைவுகள் அதிகமாகவும் உள்ளதால், முன்னே செல்லும் வாகனங்களை கடந்து செல்வது சவாலாக உள்ளது.
எனவே, இந்த சாலையின் இருபுறமும் தலா ஐந்து அடி அகலத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். இதனால், நெரிசல், விபத்துகளை தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, இந்த சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையை அகலப்படுத்த வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.