/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/பைக் மீது லாரி மோதல் ஒருவர் பலி; ஒருவர் காயம்பைக் மீது லாரி மோதல் ஒருவர் பலி; ஒருவர் காயம்
பைக் மீது லாரி மோதல் ஒருவர் பலி; ஒருவர் காயம்
பைக் மீது லாரி மோதல் ஒருவர் பலி; ஒருவர் காயம்
பைக் மீது லாரி மோதல் ஒருவர் பலி; ஒருவர் காயம்
PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM
குன்றத்துார், குன்றத்துார் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குரு, 25. பிளம்பர். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் அருண்குமார், 28, என்பவரை அழைத்து கொண்டு, யமஹா எம்.டி., 15 பைக்கில், குன்றத்துார் - -போரூர் சாலையில், நேற்று சென்றார்.
குன்றத்துார் அருகே கோவூர் பகுதியை கடந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கிய குரு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அருண்குமார், பலத்த காயங்களுடன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் வடிவேலு, 38, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.