Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மது போதையில் ரகளை ரஜினி பட வில்லன் கைது

மது போதையில் ரகளை ரஜினி பட வில்லன் கைது

மது போதையில் ரகளை ரஜினி பட வில்லன் கைது

மது போதையில் ரகளை ரஜினி பட வில்லன் கைது

PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்,:கொல்லம், நட்சத்திர ஹோட்டலில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக, நடிகர் ரஜினியின், ஜெயிலர் படத்தின் வில்லன் நடிகரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், அங்கமாலியை சேர்ந்தவர் விநாயகன்; மலையாள நடிகர். தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். 2023-ல் ரஜினியின், ஜெயிலர் படத்தில், மிரட்டும் வில்லனாக நடித்திருந்தார்.

சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் போதையில் தகராறு செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் குடிபோதையில் இருந்த அவர், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார். போலீசார், விநாயகனை கைது செய்தனர். அவர் மது குடித்திருந்தது, மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. பின், அஞ்சலமூடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றபோது, 'என்னை ஏன் இங்கு வைத்துள்ளீர்கள்' எனக்கேட்டு, போலீசாரிடமும் தகராறு செய்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us