PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM
காசிமேடு:பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆபரேஷன் சிந்துார் வெற்றியை போற்றும் வகையில், பா.ஜ., சார்பில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தேசிய கொடியை ஏந்தி படகு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், படகு பேரணிக்கு அனுமதி பெறாததால், படகு பேரணி செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாரிடம் பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணி செல்ல வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு முன் நின்றப்படி, பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கலைந்து சென்றனர்.