/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ டிரைவரை தாக்கிய நால்வர் கும்பல் கைது டிரைவரை தாக்கிய நால்வர் கும்பல் கைது
டிரைவரை தாக்கிய நால்வர் கும்பல் கைது
டிரைவரை தாக்கிய நால்வர் கும்பல் கைது
டிரைவரை தாக்கிய நால்வர் கும்பல் கைது
PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM
கொடுங்கையூர்,கொடுங்கையூர், எழில் நகர், நான்காவது தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார், 29; டிரைவர். இவர், தன் வீட்டருகே நடந்து சென்ற போது, அவரது மாமா சண்முகம், அப்பகுதியை சேர்ந்த நால்வர் கும்பலுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது மகேஷ்குமார், தன் மாமாவை பார்த்து, 'ஏன் இவர்களுடன் சேர்ந்து பேசி கொண்டிருக்கிறாய்' என கண்டித்ததால், ஆத்திரமடைந்த நால்வர் கும்பல், மகேஷ்குமாரை தாக்கியதில் காயமடைந்தார்.
இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசில் மகேஷ்குமார் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த லாரன்ஸ், 23, அமானுல்லா, 18, அன்னை சத்யா நகரை சேர்ந்த கார்த்திக், 19, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மோகன்ராஜ், 18, ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.