/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ' தனியாக சாப்பிடும் ' ஆளுங்கட்சி நிர்வாகி மீது அதிருப்தி! ' தனியாக சாப்பிடும் ' ஆளுங்கட்சி நிர்வாகி மீது அதிருப்தி!
' தனியாக சாப்பிடும் ' ஆளுங்கட்சி நிர்வாகி மீது அதிருப்தி!
' தனியாக சாப்பிடும் ' ஆளுங்கட்சி நிர்வாகி மீது அதிருப்தி!
' தனியாக சாப்பிடும் ' ஆளுங்கட்சி நிர்வாகி மீது அதிருப்தி!
PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

“பெருசா கண்டுக்கல ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாரைங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினமான மே 21ம் தேதியை, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளா அனுசரிக்கறா... அன்னைக்கு அரசு அலுவலகங்கள்ல அதிகாரிகள், ஊழியர்கள் எல்லாரும் கூடி, கொஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்தா ஓய்...
“தலைமை செயலகத்துல, முதல்வர் தலைமையிலும் நிகழ்ச்சி நடக்கும்... அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் கலந்துப்பா ஓய்... ஆனா, இந்த வருஷம் இதை யாரும் கண்டுக்கல... சில அரசு அலுவலகங்கள்ல மட்டும் பேருக்கு உறுதிமொழி எடுத்து, கதையை முடிச்சுட்டா...
“காங்., கூட்டணியில் இருந்தும் தி.மு.க., அரசு, ராஜிவ் நினைவு தினத்தை கண்டுக்காதது காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு ஓய்...” என்றார், குப்பண்ணா.
“கமிஷனர் அதிரடியால கலங்கி போயிருக்காவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“கோவை சிட்டிக்குள்ள இருக்கிற பல போலீஸ் ஸ்டேஷன்கள்ல, புகார்கள் மீது வழக்கே பதிவு செய்யாம, 'டீலிங்' பேசி பணத்தை கறந்துடுதாவ... குறிப்பா, வெரைட்டி ஹால் ரோடு ஸ்டேஷன்ல இருந்த பெண் அதிகாரி, அந்த ஏரியா கடைகள்ல கணக்கு வழக்கு இல்லாம மாமூலை வாரி குவிச்சாங்க வே...
“இது, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் காதுக்கு போக, அவர் விசாரணை நடத்தி, பெண் அதிகாரியை அதிரடியா கன்ட்ரோல் ரூமுக்கு மாத்திட்டாரு... ஆத்துல உற்சாகமா நீந்திட்டு இருந்த, 'மீனை' துாக்கி, தொட்டிக்குள்ள விட்ட மாதிரி ஆகிட்டு...
“அதே மாதிரி, சிட்டிக்குள்ள அதிகாரிகள், போலீசார் பணம் வாங்குறது கமிஷனருக்கு தெரிஞ்சா, அவங்களை மண்டலம் விட்டு மண்டலம் துாக்கி அடிச்சிடுதாரு வே...” என்றார், அண்ணாச்சி.
“ஆளுங்கட்சி நிர்வாகி மீது கடும் அதிருப்தியில இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“சிவகங்கை மாவட்டத்துல, அமைச்சர் பெரியகருப்பனுக்கு வலதுகரம் மாதிரி தி.மு.க., புள்ளி ஒருத்தர் இருக்காரு... இவர், சாக்கோட்டை ஒன்றியம் மற்றும் காரைக்குடியை ஒட்டியிருக்கிற பேரூராட்சிகள்ல மிரட்டல் வசூல்ல ஈடுபடுறாரு பா...
“பள்ளத்துார் பேரூராட்சி தலைவருக்கு குடைச்சல், ரேஷன் கடைகள், மது கடைகள்ல மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் வசூல், கோட்டையூர் பேரூராட்சி யில பா.ஜ., நிர்வாகியுடன் கைகோர்த்து, 'கட்டிங்' வசூல், கானாடு காத்தான் பேரூராட்சி பெண் தலைவிக்கு இடையூறுன்னு இவர் மேல வண்டி, வண்டியா புகார்கள் குவியுது பா...
“இது பத்தி அமைச்சரிடம் சிலர் முறையிட்டதுக்கு, 'நீங்களே உங்க பிரச்னைகளை பேசி தீர்த்துக்குங்க'ன்னு நழுவிட்டாராம்... தி.மு.க., புள்ளியோ, 'நான் செய்றது எல்லாம் அமைச்சருக்கும் தெரியும்... என்னை பிடிக்காதவங்க, பொய் குற்றச்சாட்டுகளை பரப்புறாங்க'ன்னு சொல்றாரு பா...
“இவரால பாதிக்கப்பட்ட ஒன்றிய, பேரூராட்சி தி.மு.க.,வினர், 'ஆட்சிக்கு வந்து அஞ்சு வருஷமாகியும், நாங்க எந்த பலனும் அடையல... இவர் ஒருத்தரே எல்லாத்தையும் சாப்பிட்டா என்ன அர்த்தம்'னு புலம்புறாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
“ரவி இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...” என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.