PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 23. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருண்குமார், அந்த சிறுவனை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் படுகாயமடைந்த சிறுவன், அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தலையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.