Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 42 அங்குல எல்.இ.டி., 'டிவி' கேட்கும் போலீஸ் அதிகாரி!

42 அங்குல எல்.இ.டி., 'டிவி' கேட்கும் போலீஸ் அதிகாரி!

42 அங்குல எல்.இ.டி., 'டிவி' கேட்கும் போலீஸ் அதிகாரி!

42 அங்குல எல்.இ.டி., 'டிவி' கேட்கும் போலீஸ் அதிகாரி!

PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''மதுரை பா.ஜ.,வுல நடக்கிற பஞ்சாயத்தை கேளுங்க வே...'' என்றபடி, பெஞ்சில் அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''மதுரை பா.ஜ.,வுல, 30 வருஷமா இருக்கிறவங்களை, புதுசா கட்சிக்கு வந்தவங்க மதிக்கிறது இல்ல... சீனியர், ஜூனியர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துட்டு இருக்கு வே...

''முன்னாடி, ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரா இருந்த சுசீந்திரன், இப்ப, மதுரை நகர பா.ஜ., தலைவரா இருக்காரு... முன்னாடி இவர் நியமித்த பல நிர்வாகிகள், புறநகர் மாவட்ட அமைப்புகள்ல இருந்தாவ வே...

''அவங்களை, இப்ப புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மதிக்க மாட்டேங்காவ... அதுவும் இல்லாம, 200 பேரை, கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியில இருந்தும் நீக்கிட்டாவ வே...

''இந்த மாவட்டத்தை சேர்ந்த மாநில, கோட்ட பொறுப்பாளர்கள் பலரும், நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சங் பரிவார் அமைப்புகள்ல இருந்து வந்தவங்க... இவங்களுக்கு, கட்சி நிர்வாகிகள் மத்தியில எழும் பிரச்னைகளை தீர்க்கும் அளவுக்கு சாமர்த்தியமும், அக்கறையும் இல்ல... 'இப்படியே போனா, சட்டசபை தேர்தலை சந்திக்கிறது சங்கடம்'னு பா.ஜ., தொண்டர்கள் கவலைப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பெட்டிக்கு எட்டு ரூபாய் கறாரா வசூல் பண்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''எந்த துறை விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''டாஸ்மாக் கடைகளில் மதுபான பெட்டிகளை, ஒப்பந்ததாரர்கள் மூலமா தான் இறக்குறாங்க... ஒவ்வொரு கடையிலும் மதுபான பெட்டிகளை இறக்குறப்ப, ஒரு பெட்டிக்கு எட்டு ரூபாய் வீதம், அந்த கடை ஊழியர்களிடம் கறாரா கேட்டு வாங்கிடுறாங்க பா...

''யாரும் தர மறுத்தா, 'அதிகாரிகளிடம் சொல்லி, வருமானம் இல்லாத கடைக்கு மாறுதல் போட்டுருவோம்'னு மிரட்டுறாங்க... அதுவும் இல்லாம, பெட்டிகளை இறக்குற லோடுமேன்களே, 2,000 ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கையோட எடுத்துட்டு போயிடுறாங்க பா...

''இந்த பாட்டில்களை லோடுமேன்கள் வெளியில வித்து காசு பார்த்துடுறாங்க... 'இதனால ஏற்படுற இழப்பையும் ஈடுகட்ட வேண்டியிருக்கிறதால தான், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வசூல் பண்ண வேண்டியிருக்கு'ன்னு டாஸ்மாக் ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''புதுசா, 'டிவி' கேட்டு நச்சரிக்கறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் குப்பண்ணா.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னையில், முதல்வர் ஸ்டாலின் கோட்டைக்கு போயிட்டு வர்ற வழியான பீச் ரோடு உள்ளிட்ட பகுதிகளின் பாதுகாப்பு பணிகளை கவனிக்கற உதவி கமிஷனர் ஒருத்தர் இருக்கார்... இவர், தனக்கு கீழ் பணிபுரியும் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசாரிடம், 'ஹெல்மெட் போடாம போறவா, போதையில் வாகனம் ஓட்டறவா மேல நிறைய வழக்கு பதிவு பண்ணுங்கோ'ன்னு நெருக்கடி தரார் ஓய்...

''அதுவும் இல்லாம, தனக்கு புதுசா, 42 அங்குல எல்.இ.டி., டிவி வாங்கி தாங்கோன்னும், கீழ்மட்ட அதிகாரிகளிடம் நச்சரிச்சிட்டு இருக்கார்... இதனால, 'ஹெல்மெட் அணியாதவா, போதையில் வாகனம் ஓட்டறவா மேல வழக்கு போடறதா மிரட்டி, 'கட்டிங்' வசூல் பண்ணி, எனக்கு, 'டிவி' வாங்கி தாங்கன்னு சொல்லாம சொல்றாரோ'ன்னு போலீசார் சிண்டை பிய்ச்சுண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பெரியவர்கள் பேச்சு முடிய, பெஞ்ச் அமைதியானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us