Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கலெக்டர் கார் சர்வீஸ் பணத்தை தராமல் அடாவடி!

கலெக்டர் கார் சர்வீஸ் பணத்தை தராமல் அடாவடி!

கலெக்டர் கார் சர்வீஸ் பணத்தை தராமல் அடாவடி!

கலெக்டர் கார் சர்வீஸ் பணத்தை தராமல் அடாவடி!

PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''திருச்சி மாநாட்டுல, முக்கிய புள்ளிகள் நடிகர் கட்சியில ஐக்கியமாக போறாங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் அந்தோணிசாமி.

''நடிகர் விஜய் கட்சி தகவலா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''ஆமா... நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை, வர்ற செப்டம்பர்ல திருச்சியில நடத்த முடிவு பண்ணிட்டாங்க... மாநாட்டுல, கட்சியின் கொள்கைகளை அறிவிக்கவும், கட்சி கொடியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்காங்க...

''தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருக்கிற முக்கிய புள்ளி ஒருத்தரும், அ.தி.மு.க.,வுல சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், காங்., கட்சியின் முன்னாள் நிர்வாகிகள்னு பல முக்கிய புள்ளிகள், இந்த மாநாட்டுல, விஜய் கட்சியில ஐக்கியமாக போறாங்க...

''இதுக்கான திரைமறைவு பேச்சு எல்லாம் பக்காவா நடந்து முடிச்சிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எப்ப மாறுதல் வரும்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''லோக்சபா தேர்தல் விதிகளின்படி, தமிழகம் முழுக்க இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களை வேற இடங்களுக்கு மாத்தினாளோல்லியோ... வேற ஊர்களுக்கு போன இவா, தற்காலிக வாடகை வீடு, லாட்ஜ்கள்ல தங்கி டூட்டி பார்த்துண்டு இருக்கா ஓய்...

''தேர்தல் விதிகள் வாபஸ் ஆனதும், டி.ஜி.பி., தலைமையில், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., அட்மின் ஏ.டி.ஜி.பி., ஆகிய மூணு அதிகாரிகளும் இணைந்து போர்டு மீட்டிங் நடத்துவா... அந்த மீட்டிங்குல, எந்தெந்த அதிகாரிகளை மறுபடியும் எங்க பணிமாறுதல் செய்யலாம்னு முடிவு பண்ணி, உத்தரவு போடுவா ஓய்...

''ஆனா, தேர்தல் விதிகள் வாபஸாகி, ஒன்றரை மாசத்துக்கு மேலாகியும், இந்த போர்டு மீட்டிங்கை இன்னும் நடத்தல... இதனால, தற்காலிகமா ரூம் எடுத்து தங்கியிருக்கற போலீஸ் அதிகாரி கள் எல்லாம், 'எப்ப நமக்கு பணி மாறுதல் வரும்'னு ஏக்கத்தோட காத்திருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கலெக்டர் கார் பஞ்சாயத்தை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''ராமநாதபுரம் கலெக்டர் காரை, தனியார் கார் ஏஜன்சியில சர்வீசுக்கு விடுவாவ... இந்த வகையில, 1.50 லட்சம் ரூபாய் வரைக்கும், சர்வீஸ் பில் பாக்கி இருக்கு வே...

''சமீபத்துல காரை சர்வீசுக்கு விட்டதுல, 70,000 மேல் பில் வந்திருக்கு... பணம் தராம, காரை எடுக்க கலெக்டரின் டிரைவர் போயிருக்காரு... அங்க பணம் கேட்க, டிரைவர் கையை விரிக்க, வாக்குவாதம் ஆகிடுச்சு வே...

''உடனே, அந்த கார் ஏஜன்சியில தாசில்தார், பி.டி.ஓ., - ஆர்.ஐ.,ன்னு அனைத்து அதிகாரிகளும் முகாமிட்டு, ஆவணங்களை சோதனை செஞ்சாவ... அவங்களும் எல்லா ஆவணங்களையும் காட்டியிருக்காவ வே...

''இதனால, இனியும் மோதல் வேண்டாம்னு முடிவு எடுத்த கார் ஏஜன்சி, கலெக்டர் வீட்டுக்கு காரை எடுத்துட்டு போயிருக்கு... அங்க இருந்தவங்க, 'நாங்க பணத்தை கட்டிட்டு காரை எடுத்துக்கிறோம்'னு வீம்பா சொல்லிட்டாவ வே...

''விவகாரத்தை முடிக்க நினைச்சு, கார் ஏஜன்சியின் கோவை சி.இ.ஓ., கலெக்டரையே நேர்ல பார்த்து பேசலாம்னு வந்தும், கலெக்டரை பார்க்க முடியாம திரும்பிட்டாரு... இப்ப, 70,000 கட்டி, காரை வாங்கியிருக்காவ...

''ஆனா, பழைய பாக்கி அப்படியே தான் இருக்கு வே... புதுசா வந்திருக்கிற கலெக்டராவது இந்த தொகையை பைசல் பண்ணுவாரான்னு கார் நிறுவனம் காத்துட்டு இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us