/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பட்டாபிராமபுரம் ஊராட்சி தார் சாலை சீரமைப்பு பட்டாபிராமபுரம் ஊராட்சி தார் சாலை சீரமைப்பு
பட்டாபிராமபுரம் ஊராட்சி தார் சாலை சீரமைப்பு
பட்டாபிராமபுரம் ஊராட்சி தார் சாலை சீரமைப்பு
பட்டாபிராமபுரம் ஊராட்சி தார் சாலை சீரமைப்பு
PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சியில் பட்டாபிராமபுரம் கிராமம், விநாயகபுரம், கீழ் விநாயகபுரம் மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் தார்ச்சாலைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் குண்டும், குழியுமாக மாறியும் ஜல்லி கற்கள் பெயர்ந்திருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி தவித்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று பகுதிகளுக்கு செல்லும், 3.5 கி.மீ., துாரம் தார்ச்சாலைகள் சீரமைப்பதற்கு, 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது.
தற்போது இச்சாலைகள் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமின்றியும் விபத்து இல்லாமல் பயணிக்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.