/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர் : புகார் பெட்டி;பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதிதிருவள்ளூர் : புகார் பெட்டி;பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருவள்ளூர் : புகார் பெட்டி;பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருவள்ளூர் : புகார் பெட்டி;பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருவள்ளூர் : புகார் பெட்டி;பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 25, 2024 12:04 AM

பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
சென்னை - பெங்களூரு அதிவிரைவு நெடுஞ்சாலையிலிருந்து வரதராஜபுரம், நசரத்பேட்டை மற்றும் அகரம்மேல் ஊராட்சிகளுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த பகுதிவாசிகள், இச்சாலை வழியாக தினமும் சென்று வருகின்றனர். இச்சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது.
மழைநேரங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ப.பூபாலன்,
திருமழிசை.
பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில், 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிழற்குடை போதிய பராமரிக்கப்படாததால் சேதமடைந்து, பரிதாப நிலையில் உள்ளது. மேலும், விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மாறி, இரவு நேரங்களில் மதுக்கூடமாக மாறி வருகிறது. இதனால், இந்த நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - என்.விநாயகம். பாப்பரம்பாக்கம்.
அரசு கல்லுாரிக்கு கூடுதல் பேருந்து அவசியம்
சென்னை - -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் படித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கல்லுாரிக்கு பேருந்துகள் வாயிலாக தான் சென்று வருகின்றனர். ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
எனவே, அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, கூடுதல் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஆர்.கோபால், திருத்தணி.