/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர்: புகார் பெட்டி;மேதினாபுரம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்திருவள்ளூர்: புகார் பெட்டி;மேதினாபுரம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
திருவள்ளூர்: புகார் பெட்டி;மேதினாபுரம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
திருவள்ளூர்: புகார் பெட்டி;மேதினாபுரம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
திருவள்ளூர்: புகார் பெட்டி;மேதினாபுரம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூலை 04, 2024 01:26 AM

மேதினாபுரம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் மற்றும் சத்திரஞ்ஜெயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து மேதினாபுரம் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய தார்ச்சாலை உள்ளது.
இச்சாலையை ஒன்றிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து, இச்சாலையை சீரமைக்க கோரி, பலமுறை கிராம சபையில் மனு கொடுத்து புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பழனி, சத்திரஞ்ஜெயபுரம்.