/புகார் பெட்டி /செங்கல்பட்டு/ செங்கல்பட்டு: புகார் பெட்டி;குப்பை கொட்டும் இடமான கால்நடை குடிநீர் தொட்டி செங்கல்பட்டு: புகார் பெட்டி;குப்பை கொட்டும் இடமான கால்நடை குடிநீர் தொட்டி
செங்கல்பட்டு: புகார் பெட்டி;குப்பை கொட்டும் இடமான கால்நடை குடிநீர் தொட்டி
செங்கல்பட்டு: புகார் பெட்டி;குப்பை கொட்டும் இடமான கால்நடை குடிநீர் தொட்டி
செங்கல்பட்டு: புகார் பெட்டி;குப்பை கொட்டும் இடமான கால்நடை குடிநீர் தொட்டி
ADDED : ஜூலை 04, 2024 12:51 AM

குப்பை கொட்டும் இடமான கால்நடை குடிநீர் தொட்டி
கோடைக் காலங்களில் நீர்நிலைகள் வறண்டு விடுவதால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால்தவிக்கும்.
அதனால், கால்நடைகளின் தாகத்தை தணிப்பதற்காக, கிராம ஊராட்சிகளில், கால்நடைகளுக்கு என பிரத்யேகமாக குடிநீர் தொட்டி கட்ட, அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன் மாதிரி செயல்பாட்டிற்காக, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், கால்நடை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
அவை பராமரிப்பின்றி குப்பை தொட்டியாக மாறி விட்டன. இதனைசீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மணிமாறன், திருப்போரூர்.
சாலைகளில் மாடுகள் தஞ்சம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து முனையம், ஊரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், தைலாவரம் வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் மையப் பகுதியில், அதிக அளவில் மாடுகள் தஞ்சம் அடைந்துள்ளன.
அவை, சாலையின் மையப்பகுதியில் இருந்து,திடீரென்று எழுந்து ஓடுவதால், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, பட்டியில் அடைக்கவும், மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.தங்கராசு, கூடுவாஞ்சேரி.