/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர்: புகார் பெட்டி ; சிறுவாபுரியில் பக்தர்களை அச்சுறுத்தும் கால்நடைகள்திருவள்ளூர்: புகார் பெட்டி ; சிறுவாபுரியில் பக்தர்களை அச்சுறுத்தும் கால்நடைகள்
திருவள்ளூர்: புகார் பெட்டி ; சிறுவாபுரியில் பக்தர்களை அச்சுறுத்தும் கால்நடைகள்
திருவள்ளூர்: புகார் பெட்டி ; சிறுவாபுரியில் பக்தர்களை அச்சுறுத்தும் கால்நடைகள்
திருவள்ளூர்: புகார் பெட்டி ; சிறுவாபுரியில் பக்தர்களை அச்சுறுத்தும் கால்நடைகள்
ADDED : ஜூன் 18, 2025 09:17 PM

சிறுவாபுரியில் பக்தர்களை அச்சுறுத்தும் கால்நடைகள்
பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாடு, நாய் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுகின்றன.
உணவுக்காக நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் போது, பக்தர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடிக்கின்றனர். அதேபோல, கோவில் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.
எனவே, கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாய், மாடு உள்ளிட்டவை சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.