ADDED : ஜூலை 09, 2024 04:10 AM

ரேஷன் கடை கட்டடத்தில் சேதமடைந்த சாய்தளம்
காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடை வாயிலாக புரிசைதோப்பு மற்றும் புரிசை கிராமத்தினர், ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த ரேஷன் கடை கட்டடத்தில், சாய்தளப் பகுதி சேதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல வருவோர், சேதமான தரையில் நிலை தடுமாறி விழுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, சேதமான சாய்தளத்தை சீரமைக்க வேண்டும்.
--ஆர்.குமார், புரிசை.