Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : மே 24, 2025 12:11 AM


Google News

குறைந்தழுத்த மின் சப்ளை


கள்ளக்குறிச்சி நகரின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தழுத்த மின் சப்ளை வழங்கப்படுவதால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன.

-கண்மணி, கள்ளக்குறிச்சி.

அடிப்படை வசதி தேவை


கள்ளக்குறிச்சியில் விரிவாக்க பகுதிகளில் சாலை, குடிநீர், தெரு மின்விளக்குகள், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாததால், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

-வெற்றிவேல், கள்ளக்குறிச்சி.

ஓய்வூதியத்திற்கு கமிஷன்


கள்ளக்குறிச்சியில் ஓய்வு பெறும் அரசு பணியாளர்கள் கமிஷன் வெட்டினால்தான் ஓய்வூதிய தொகை கிடைக்கும் என்ற நிலை உள்ளதால், அதிகாரிகளின் கண்காணிப்பு அவசியமாகிறது.

-சசிக்குமார், கள்ளக்குறிச்சி.

கட்டுப்பாடில்லா ஆட்டோ கட்டணம்


கள்ளக்குறிச்சியில் ஆட்டோ கட்டணத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் வரைமுறைப்படுத்த வேண்டும்.

-வெங்கடேசன், கள்ளக்குறிச்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us