ADDED : மே 23, 2025 06:56 AM
கோரிமேட்டிற்கு இரவில்டவுன் பஸ் இயக்க வேண்டும்
புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோரிமேடுஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இயக்க வேண்டும்.
ராணி, கோரிமேடு.
மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு
ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் மாடுகள் சுற்றி திரிவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பாஸ்கர், ரெட்டியார்பாளையம்.
மின் கம்பங்களை அகற்ற வேண்டும்
வில்லினுார் ஆஞ்சநேயர் கோவில் அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும்.
ரஜினி முருகன், வில்லியனுார்.
நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதி
மரப்பாலம் சந்திப்பில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கலைச்செல்வன், மரப்பாலம்.