ADDED : மார் 25, 2025 04:35 AM
ஆக்கிரமிப்பு அகற்றியும் பயனில்லை
கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பும், வாய்க்கால் சீரமைக்கப்படாமலும், சாலை அகலப்படுத்தப்படாமலும் உள்ளது.
--சீனுவாசன், கள்ளக்குறிச்சி.
கழிவுநீர் கால்வாய் தேவை
சந்தைப்பேட்டை, கீரனுார் காலனியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால், கொசு தொல்லை அதிகமாகி உள்ளது. இதனை தடுக்க கழிவுநீர் கால்வாய் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பலராமன், கீரனுார்.
மணல் கடத்தல் தடுக்கப்படுமா?
சந்தைப்பேட்டை காவேரி சந்து வழியாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், சந்தைப்பேட்டை.
ரேஷன் கடை இடமாற்றத்தால் பாதிப்பு
கள்ளக்குறிச்சி கருணாபுரம் 8 வது வார்டில் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை தற்போது ஒரு கி.மீ., துாரத்தில் 9 வது வார்டில் உள்ள ரேஷன் கடை அருகே மாற்றப்பட்டதால், பொருட்கள் வாங்க வெகு தொலைவிற்கு பொதுமக்கள் செல்வதால் பாதிப்படைகின்றனர்.
-கண்ணன், கள்ளக்குறிச்சி.