ADDED : மார் 24, 2025 04:24 AM
போக்குவரத்து இடையூறு
காலாப்பட்டு பல்கலைகழகம் அருகே உள்ள சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
சீனுவாசன், காலாப்பட்டு.
----------------------------------------------------மாடுகளால் விபத்து அபாயம்
முருகங்கப்பாக்கம் அரவிந்தர் நகர், 8வது குறுக்கு தெருவில், மாடுகள் அதிகமாக சுற்றி திரிவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
அமுதா, முருங்கப்பாக்கம்.
------------------------------------------------------------------------- கழிவுநீர் தேக்கம்
ராஜ்பவன் கணேஷ் நகர் 5வது குறுக்கு தெருவில்,வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.
பிரேமா, ராஜ்பவன்.
-------------------------------------------------குண்டும் குழியுமாக சாலை
மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ரவிச்சந்திரன், மணவெளி.