/தினம் தினம்/சொல்கிறார்கள்/ இந்த வயதிலும் என்னை 'அப்டேட்' செய்து கொள்கிறேன்! இந்த வயதிலும் என்னை 'அப்டேட்' செய்து கொள்கிறேன்!
இந்த வயதிலும் என்னை 'அப்டேட்' செய்து கொள்கிறேன்!
இந்த வயதிலும் என்னை 'அப்டேட்' செய்து கொள்கிறேன்!
இந்த வயதிலும் என்னை 'அப்டேட்' செய்து கொள்கிறேன்!
PUBLISHED ON : ஜூன் 08, 2025 12:00 AM

கடந்த 65 ஆண்டுகளாக சைகை மொழிபெயர்ப்பாளராக இருக்கும் விஜயா பாஸ்கரன்: தற்போது எனக்கு 75 வயது. அண்ணன், அக்கா, தம்பி மூவருமே 100 சதவீதம் செவித்திறன் இல்லாமல் தான் பிறந்தனர். அவர்களுடன் பழகியதால், இயல்பாகவே சைகை மொழியில் தொடர்புகொள்ள பழகி விட்டேன்.
அண்ணன், 'மெட்ராஸ் டெப் அசோஷியேஷனில்' பெரிய பொறுப்பில் இருந்தார். செவித்திறன் இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புக்காக அரசு அதிகாரிகளை சந்திப்பதற்கும், பெரிய நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்போரை சந்திக்கச் செல்லும்போதும், என்னையும் அழைத்துச் செல்வார்.
அப்போது அவர்கள் சொல்வதை எங்கள் அண்ணனுக்கும், அண்ணன் சொல்வதை அங்கு இருப்போருக்கும் மொழிபெயர்ப்பு செய்வேன்.
அவர் வாயிலாக நிறைய நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகளில் சைகை மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி இருக்கிறேன். என், 10வது வயதில் இந்த வேலைகளை ஆரம்பித்தேன்.
பல இடங்களில் மேடைகளில் நான் சைகை மொழிபெயர்ப்பாளராக இருப்பதை பார்த்து தான், துார்தர்ஷனில் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு கொடுத்தனர்.
செவித்திறன் இல்லாதவர்களுக்கு பல பெரிய நிறுவனங்களில் இன்டர்வியூ, 'அட்டெண்ட்' செய்து, வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 37 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். செவித்திறன் இல்லாதவர்களின், 'பாடி லாங்குவேஜ்' எப்படி இருக்கும், அவர்கள் கோபப்பட்டால் எப்படி, 'ரியாக்ட்' செய்வர் என, பல விஷயங்களை, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன்.
கல்லுாரி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதை, செவித்திறன் இல்லாத மாணவர்களுக்கு சைகை மொழியில் நான் மொழிபெயர்ப்பேன். சில நேரம் 7 மணி நேரம்கூட அடுத்தடுத்து வகுப்புகள் எடுத்திருக்கிறேன்.
வீட்டுக்கு வந்தால் கையை துாக்க முடியாத அளவிற்கு வலிக்கும். மாத்திரை மருந்துடன் தான் இப்போதும் அதை செய்து வருகிறேன்.
அனைத்து சேனல்களிலும் சைகை மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு வர வேண்டும் என்பது என் ஆசை. சைகை மொழியின் அடிப்படையை, 10 நாட்களில் கற்றுக் கொள்ளலாம்.
அதில் சரளமாக உரையாட வேண்டும் என்றால், செவித்திறன் இல்லாதவர்களிடம் நிறைய பேசிப்பழக வேண்டும். அவர்களுக்குள் புழங்குகிற புது வார்த்தைகளை எல்லாம் நான் அப்படித்தான், 'அப்டேட்' செய்து கொள்கிறேன்.
சொல்கிறார்கள்
எங்களிடம் எல்லாமே 'ஆர்கானிக்' தான்!
ஆர்கானிக் உணவு பொருட்களை சென்னை முழுதும் டோர் டெலிவரி செய்யும், 'மைஹார்வெஸ்ட்' நிறுவனர் அர்ச்சனா:
அண்ணா பல்கலை கழகத்தில், 'ஜியோ
இன்பர்மேட்டிக்ஸ்'
முடித்திருக்கிறேன். கல்லுாரி நண்பரையே திருமணம் செய்து கொண்டேன். நானும், கணவரும் இயற்கை விவசாயம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். சொந்த நிலம் இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் அத்தங்கி காவனுார் கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். முதலீடு செய்ய ஒரு நண்பர் முன்வந்தார்.
சில இயற்கை விவசாயிகள் வழிகாட்டுதலில் காய்கறிகள், கீரைகள் பயிரிட்டோம். 800 நாட்டுக் கோழி குஞ்சுகள் வளர்த்தோம். வயலிலேயே ஒரு குடிசை வீடு கட்டி தங்கினோம்.
சரியும், தவறுமாக விவசாயத்தை மெல்ல மெல்ல கற்றுக் கொண்டோம். விளைச்சல் வர துவங்கியது. சென்னையில் உள்ள சில ஆர்கானிக் கடைகளிலும், நண்பர்களின் வீடு
களிலும் ஆர்டர் எடுக்க ஆரம்பித்தேன். அடுத்த கட்டமாக, சமூக வலைதளங்களில் விற்பனையை ஆரம்பித்தோம்; அமோக வரவேற்பு அளித்தனர். அழகாக காய்கறிகளை, 'பேக்' செய்து டெலிவரி
செய்தோம்.
அதனுடன், அதில் அந்த காய்கறிகள் எப்படி விளைந்தது, அதை வைத்து என்னென்ன சமைக்கலாம் என்று, 'ரெசிபி'களும் கொடுப்பேன்.மூன்று வாரங்கள் சரியாக சென்றது. அதன்பின், 'ஒரே மாதிரி காய்கறியாக தர்றீங்களே?' என்று கேட்க ஆரம்பித்தனர். எங்கள் வயலில் என்ன விளைந்ததோ, அதை மட்டும் தான் சப்ளை செய்தோம். காலிப்ளவர், கேரட், உருளைக்கிழங்கு எல்லாம் கேட்டனர்.
அதற்காக நீலகிரி, கொடைக்கானல் சென்று இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை தேடிப்பிடித்து வாங்கினோம். 100 குடும்பங்களுக்கு காய்கறி விநியோகம் விரிவானது.
இந்த சூழலில் தான் கொரோனா லாக்டவுன் வந்தது; மக்களுக்கும் ஆர்கானிக் உணவு மேல் விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த கால கட்டத்தில் தான் காய்கறிகளுடன், பழங்களையும் பட்டியலில் சேர்த்தோம்.
வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் ஆர்டர் செய்து அம்மாவிடம் கொடுக்க சொல்வர்; கொரோனா நோயாளிகள் ஆர்டர் செய்வர். அந்த கால கட்டத்தில் ஒரு ஆர்டர் கூட விடுபடாமல் பார்த்துக் கொண்டோம். 18 வாடிக்கையாளர்களோடு துவங்கிய நிறுவனத்தில் தற்போது, 20,000 பேர் உள்ளனர்.
'காய்கறி, பழங்கள் மட்டும் தானா?' என்று மக்கள் கேட்க ஆரம்பித்தனர்; செக்கு எண்ணெய், நெய், அரிசி என புதிதாக நிறைய சேர்த்தோம்.
காய்கறிகள், பழங்கள் தவிர்த்து, மற்ற பொருட்களை இந்தியா முழுதும் அனுப்புகிறோம். 300 இயற்கை விவசாயிகளிடம் இருந்து தற்போது உற்பத்தியை வாங்குகிறோம். நிலையான ஒரு இடத்தை தொட்டிருக்கிறோம். கஷ்டப்பட்ட நிலை மாறி, இன்று எங்களிடம், 50 பேர் வேலை செய்கின்றனர். தமிழகம் முழுதும் இதை விரிவு
படுத்த வேண்டும். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. தொடர்புக்கு: 72006 06516