/தினம் தினம்/சொல்கிறார்கள்/ இந்த கஷ்டம் எல்லாம் பணத்துக்காக மட்டுமல்ல! இந்த கஷ்டம் எல்லாம் பணத்துக்காக மட்டுமல்ல!
இந்த கஷ்டம் எல்லாம் பணத்துக்காக மட்டுமல்ல!
இந்த கஷ்டம் எல்லாம் பணத்துக்காக மட்டுமல்ல!
இந்த கஷ்டம் எல்லாம் பணத்துக்காக மட்டுமல்ல!
PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM

நடமாடும் பேன்ஸி ஸ்டோர் நடத்தும், சென்னையைச் சேர்ந்த பிரியா கண்ணன்: சொந்த ஊரே சென்னை தான். எம்.பி.ஏ., படித்து விட்டு, ஐ.டி., கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறேன். தற்போது பகுதி நேரமாக பிசினஸ் செய்கிறேன்.
பிசினசில் எனக்கு, 'ரோல் மாடல்' என் அம்மா தான். தெருவில் காய்கறி வியாபாரம் செய்வார். நான் பி.காம்., முடித்துவிட்டு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தபடியே, எம்.பி.ஏ., படித்தேன். அதன்பின் ஐ.டி., கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.
கொரோனா ஊரடங்கில், வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும்படி அலுவலகத்தில் கூறினர். அதனால், ஓய்வு நேரங்களில் யு டியூப் பார்த்து பிரேஸ்லெட், கம்மல் போன்ற அணிகலன்கள் செய்ய ஆரம்பித்தேன்.
அவற்றை படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டேன்; நண்பர்கள் வாங்கினர். 500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த பேன்ஸி பொருள் பிசினசில், தற்போது மாதம் 35,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.
'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' கம்பெனிகளுடன் சேர்ந்து கல்லுாரிகளில், 'ஸ்டால்' போட ஆரம்பித்தேன். நான் வேலை பார்க்கும் கம்பெனியில், இரவுநேர வேலை கேட்டு வாங்கினேன்.
பகலில் பிசினஸ் பார்ப்பது, இரவில் அலுவலக வேலை என, நேரத்தை பிரித்துக் கொண்டேன். திருமணமாகி, குழந்தை பிறந்ததும் பொறுப்புகள் கூடின. அதனால், சமைப்பது முதல் பிசினசில் உதவி செய்வது வரை கணவரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்.
பொதுவாக ஒரு இடத்தில், 'ஸ்டால்' போடணும் என்றால், அந்த இடத்துக்கு பொருளை எடுத்துச் செல்ல வேண்டும். போக்குவரத்து, ஈவென்ட் நடத்துவோருக்கு என, நிறைய செலவாகும்.
இந்த செலவுகளை குறைக்க, நிரந்தரமாக ஒரே இடத்தில் கடை போடலாம் என்று முடிவெடுத்தேன்; ஆனால், கடையின் வாடகை அதிகமாக இருந்தது.
அப்போது தான், நடமாடும் கடைக்கான யோசனை வந்தது. நடமாடும் கடையில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என, இன்ஜினியரிடம் கூறி, அதற்கேற்றார் போல் செய்து வாங்கினேன். 2.50 லட்சம் ரூபாய் செலவானது.
நீளமான ஆட்டோ போன்ற இந்த வண்டி வந்தபின், பொருட்களை 'பேக்' செய்வது, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்று ஸ்டால் போடுவதெல்லாம் எளிதாக இருக்கிறது; பிசினசும் வளர்ந்து வருகிறது.
'ஐ.டி., வேலையில் சம்பாதிப்பது போதாதா... இப்படி கஷ்டப்படணுமா...' என, பலரும் கேட்கின்றனர். இந்த கஷ்டம் பணத்துக்காக மட்டும் அல்ல... என் பேஷனுக்காகவும் தான்.
பிசினசை பெரிதாக்கி, சென்னை முழுதும் வியாபாரத்தை, 'டெவலப்' செய்ய வேண்டும் என்று நிறைய ஆசைகள் இருக்கின்றன.