நாளைய உலகம் தமயந்தி பற்றி பேசணும்!
நாளைய உலகம் தமயந்தி பற்றி பேசணும்!
நாளைய உலகம் தமயந்தி பற்றி பேசணும்!
PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

'நேச்சுரல்ஸ்' மற்றும் 'பேஜ் 3' பியூட்டி சலுான்களின் நிறுவனர்களில் ஒருவரான குமாரவேல்:
ஒரு பெண், தன் பெயருக்கு பின்னால் அப்பா பெயரையோ, கணவர் பெயரையோ அவசியம் சேர்த்துக்கணும்னு இந்த சமுதாயம் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
என் மனைவி வீணா, என் பெயரை அவர்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை கேட்டால் குழந்தை வளர்ப்பில் உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக அப்பாவை விட, அம்மாவோட ரோல் ரொம்ப பெருசு.
அதனால் பெண்கள் விரும்பினால், பெயருக்கு பின்னால் அம்மா பெயரை சேர்த்துக்கட்டும். குழந்தைகள் நம் வாயிலாக பிறப்பவர்கள்; நமக்காக பிறந்தவர்கள் இல்லை. பிள்ளைங்களோட விருப்பங்களை, லட்சியங்களை நிறைவேற்ற நம்மால் முடிந்த சப்போர்ட்டை கொடுக்கணுமே தவிர, தங்களோட ஆசைகளை, கனவுகளை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது.
என் மகளான தமயந்தி, ஸ்விட்சர்லாந்தில் ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சாங்க; ஆனால், அந்த துறையில் வேலை பார்க்க அவருக்கு ஆர்வம் இல்லை. 'கோவிட்' தொற்று நேரத்தில், பியூட்டி இண்டஸ்ட்ரியும் ஸ்தம்பித்துப் போயிருந்தது. அப்போது, என் மகளுக்காக, 'நம்ம கபே'ன்னு ஒரு காபி ஷாப் துவங்கினேன்.
மார்க்கெட்டை பிடிக்கணும்னு, அந்த கடையை சீக்கிரமாக பிரபலமாக்க நினைத்தேன். ஆனால், என் மகளோ அதை பொறுமையாக வளர்த்தெடுக்க நினைத்தார்.
எங்கள் இருவரின் எண்ணங்களும் வேறுவேறாக இருந்ததால், 'இந்த பிசினஸை செய்ய மாட்டேன்' என, தைரியமாக என்னிடம் கூறினார். ஆரம்பத்தில், அவருக்கு பியூட்டி பிசினசில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. 'பிசினஸுக்குள்ள வாம்மா... வந்து பார்த்துட்டு வேணுமா, வேணாமான்னு முடிவு பண்ணு'ன்னு சொன்னதுக்காக வந்தாங்க.
ஆனால், இன்னிக்கு 'பேஜ் 3'யோட அடையாளமே தமயந்தின்னு சொல்ற அளவுக்கு எல்லாவற்றையும் அவ்வளவு அழகாக பார்த்துக்கறாங்க. என் மகளை பொதுவெளியிலோ, மீடியாவிலோ பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
என்னை குடும்பத் தலைவனாக, பிசினஸ் ஹெட்டா பார்க்கிறதாலயோ என்னவோ, என்னிடம் பேசவே பலரும் தயங்குவர்.
அப்படி எதுவுமே இல்லாமல், மனதில் பட்டதை, 'படார்' என, தைரியமாக பேசும் ஒரே நபர் என் மகள்தான். தமயந்திக்கு வாழ்க்கையில் நிறைய சாதிக்கணும்ங்கிற கனவுகளும், இலக்கும் உண்டு.
'அப்பா, -அம்மா நல்லாத்தானே இருக்காங்க... நாம ஜாலியாக, ரிலாக்ஸ்டா வாழ்ந்துட்டு போகலாமே'ன்னு நினைக்காமல், பிசினஸை அடுத்த லெவலுக்கு கொண்டு போகணுங்கிற வெறி அவங்களுக்கு உண்டு.
தமயந்தியை இந்த உலகம் கவனிக்கணும். அவங்களை பத்தி பேசணும். பியூட்டி இண்டஸ்ட்ரியில் இன்னிக்கு அனிதா ராடிக் குறித்து பேசுவது போன்று, நாளைய உலகம் தமயந்தி பத்தி பேசணும். -தொடர்புக்கு:78248 22731.
எல்லா செலவும் போக மாதம் ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கிறது!
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள, தேவந்தவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும், ஸ்ரீ கோகுல கிருஷ்ண கோசாலையை நடத்தி வரும் ஸ்ரீவித்யா: நானும், என் கணவரும் தான் இதை நடத்தி வருகிறோம். இருவருமே பி.பார்ம்., முடித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் அதிகம். 2007ல் இந்த கோசாலையை துவங்கினோம்.
இது எங்கள் சொந்த நிலம். வெட்டுக்கு போற மாடுகளையும், நல்ல நிலையில் உள்ள மாடுகளையும் வாங்கி வளர்த்து வருகிறோம்.ஆரம்பத்தில், நான்கு மாடுகளுடன் துவங்கப்பட்ட இந்த கோசாலையில், தற்போது 1,146 மாடுகள் உள்ளன.
நாங்களே பசுந்தீவனம் சாகுபடி செய்கிறோம். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் நாட்டு மருந்துகள் தான் பயன்படுத்துகிறோம். முதலில் திருநீறும், சாம்பிராணியும் தயார் செய்து விற்பனை செய்து வந்தோம். பின் நாக்பூர், பெங்களூரு, கேரளா உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, மதிப்பு கூட்டல் தொடர்பாக நிறைய பயிற்சிகள் எடுத்து வந்தோம். அதன்பின், 2016ல் மதிப்பு கூட்டல் தொழிற்சாலையை துவங்கினோம்.
பற்பொடி, ஊதுபத்தி, ஷாம்பூ, பாத்திரம் தேய்க்கும் பொடி, சானிடைசர் உட்பட, 40 வகையான பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். சாண விளக்கு, சாம்பிராணி, ஊதுபத்தி, வறட்டி உள்ளிட்ட பொருட்கள் செய்ய மிஷின்கள் வைத்துள்ளோம்.
எங்கள் தயாரிப்புகளில் மிக ஸ்பெஷலாக உள்ளவை விநாயகர் சிலை, விறகு கட்டை, வீடு கட்டும் கல். இந்தப் பொருட்களுக்கு இந்தியா முழுக்க பல பகுதிகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.'சாணத்தில் தயார் செய்யப்படும் கல்லை பயன்படுத்தி வீடு கட்டினால், அது தரமாக இருக்குமா? மழை பெய்தால், கல் ஊறிடு மோ' என்ற சந்தேகம்
பலருக்கும் எழும்.
அதுமாதிரியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சாணக்கல் பயன்படுத்தி ஒரு வீடும், மாட்டுக் கொட்டகையும் கட்டியிருக்கோம். அதிக மழை பெய்த நேரங்களில் கூட, சிறு பாதிப்புகள் கூட ஏற்படவில்லை. தற்போது, மாடுகளை பராமரிக்க 41 பேரும், மதிப்பு கூட்டல் தொழிற்
சாலையில், 12 பேரும் பணிபுரிகின்றனர். நாட்டின மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட சிலர், நன்கொடைகள் கொடுக்கின்றனர். ஆனால், அதை மட்டும் சார்ந்திருந்தால், இவ்வளவு பெரிய கோசாலையை வெற்றி
கரமாக நடத்த முடியாது.எங்களது தயாரிப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக மிக எளிதாக விற்பனை செய்கிறோம். மாதத்திற்கு எல்லா செலவுகளும் போக, 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. வரும் காலங்களில் இது பல மடங்காக பெருகணும் என்பது தான் எங்கள் லட்சியம். தொடர்புக்கு:98433 16206.