Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ எந்த பிரச்னைக்கு என்ன சாப்ட்வேர் என்பது தெரியும்!

எந்த பிரச்னைக்கு என்ன சாப்ட்வேர் என்பது தெரியும்!

எந்த பிரச்னைக்கு என்ன சாப்ட்வேர் என்பது தெரியும்!

எந்த பிரச்னைக்கு என்ன சாப்ட்வேர் என்பது தெரியும்!

PUBLISHED ON : ஜூன் 09, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
சிறு, குறு நிறுவனங்கள் பெரிய அளவில் வெற்றி அடைய உதவும் நோக்கில், சிறப்பான தொழில்நுட்பத்தை உருவாக்கி தரும், 'பரொபெல் சாப்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், திருச்சியை சேர்ந்த நோவா பி.பெலிக்ஸ்:

திருச்சி என் சொந்த ஊர். பி.இ., முதலாம் ஆண்டு படித்தபோதே அப்பா இறந்து விட்டார். ஆனாலும், எங்கள் குடும்பத்துக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அப்போதே செய்து வைத்திருந்தார்.

ஆரம்பத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தியவர், பிற்பாடு லாரி சர்வீஸ் கம்பெனியை நடத்த ஆரம்பித்தார். நான் இன்ஜினியரிங் படித்த போதே, லாரிகளை, ஆயில் டேங்கர்களாக மாற்றி, வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தேன்.

தஞ்சையில் படிப்பு முடித்ததும், மும்பை ஐ.ஐ.டி-.,யில் பைப் இன்ஜினியரிங் முடித்து, மும்பையில் ஏழெட்டு ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.

அதன்பின் சொந்தமாக தொழில் செய்வதற்காக, திருச்சிக்கு வந்து, ஏற்கனவே செய்த லாரி பிசினஸையே முதலில் கையில் எடுத்தேன். லாரி ஒர்க் ஷாப், டயர் விற்பனை, டிரான்ஸ்போர்ட் என, பல வகையான சர்வீஸ்களை தந்தேன்.

லாரி பிசினசில் அதிக லாபம் கிடைத்தது என்று சொல்வதைவிட, அதிக அனுபவம் கிடைத்தது என்று சொல்வேன்.

காரணம், எந்தத் தொழிலானாலும், அது ஏதோ ஒரு வகையில் டிரான்ஸ்போர்ட்டுடன் சம்பந்தப்படும் என்பதால், பல வகையான தொழிலை செய்வோர் என்னை தேடி வருவர்.

அப்படி வருவோர், தங்கள் தொழிலில் இருக்கும் கஷ்டங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்வர். அதில், எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது... ஒரு பிசினஸை சரியாக செய்ய வேண்டுமெனில், 'சிஸ்டம் அண்டு புரொசிஜர்' கட்டாயம் தேவை என்பது தான்.

அது சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனம் செய்யும் பிசினசில் தோல்வி வர வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட, 'சிஸ்டம் அண்டு புரொசிஜரை' ஒரு சாப்ட்வேர் வடிவில் உருவாக்கித் தரும் வேலையை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்.

இதற்காக ஒரு நிறுவனத்தை துவங்கி நடத்த ஆரம்பித்த அடுத்த ஆண்டிலேயே, கொரோனா தொற்று பரவியது. ஆயினும், அசராமல் ஓர் ஏரியாவில் தொற்று எப்படி பரவி வருகிறது என்ற டேட்டாவை வைத்து, முன்கூட்டியே அலெர்ட் செய்யும் ஒரு சாப்ட்வேரை உருவாக்கினேன்; இந்த சாப்ட்வேருக்கு, இந்திய அளவில் விருது கிடைத்தது.

எனக்கு கம்ப்யூட்டரில் கோடிங் குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், பிரச்னைக்கான தீர்வை தருவதற்கு, என்ன மாதிரியான சாப்ட்வேரை உருவாக்க வேண்டும் என்பது தெரியும். அதை, என் இன்ஜினியர்களிடம் கூறினால், அவர்கள் அதை உருவாக்கி விடுவர்.

தற்போது என் கவனம் சிறு, குறு நிறுவனங்களின் பிசினஸை, பல மடங்கு வளர்ச்சி காண செய்யும் சாப்ட்வேரை, பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என்பதில் தான் உள்ளது.

தொடர்புக்கு:

www.propelsoft.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us