/தினம் தினம்/சொல்கிறார்கள்/ தமிழில் உள்ள 247 எழுத்துகளை தலைகீழாக சொல்வேன்! தமிழில் உள்ள 247 எழுத்துகளை தலைகீழாக சொல்வேன்!
தமிழில் உள்ள 247 எழுத்துகளை தலைகீழாக சொல்வேன்!
தமிழில் உள்ள 247 எழுத்துகளை தலைகீழாக சொல்வேன்!
தமிழில் உள்ள 247 எழுத்துகளை தலைகீழாக சொல்வேன்!
PUBLISHED ON : ஜூன் 26, 2024 12:00 AM

'மார்ஷல் ஆர்ட்' எனப்படும் தற்காப்பு கலைகளை கற்று, 10 வயதில் 12 உலக சாதனைகளை படைத்துள்ள, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின், ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் கிருஷ்வா:
நான் 3 வயது குழந்தையாக இருக்கும் போதே சதா எந்நேரமும் ஓடியாடிக் கொண்டு துருதுருவென இருப்பேன். அதனால், என் அம்மா தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள என்னை அனுப்பினார்.
அங்கு கராத்தே மட்டுமின்றி, சிலம்பம், ஸ்கேட்டிங், குங்பூ, செஸ், கியூப், பேட்மின்டன், ரோலா போலா என பலவற்றையும் கற்றுக் கொண்டேன்.
விளையாட்டின் மீது எனக்கிருந்த ஆர்வத்தையும், திறமையையும் பார்த்த என் மாஸ்டர்கள், போட்டிகளில் பங்கேற்க என்னை பெரிதும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
கேலோ விளையாட்டு போட்டியில் சிலம்பம் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி முன்னிலையில், குழுவாக நாங்கள் சிலம்பம் சுற்றி மெடல் வாங்கியதை மறக்க முடியாது. தமிழக அமைச்சர்களிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளேன்.
விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் நான் சுட்டிதான். தமிழில் உள்ள 247 எழுத்துகளை தலைகீழாக சொல்வேன். ஐ.ஏ.எஸ்., படித்து ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்.
எனக்கு தெரிந்த விளையாட்டுகளை வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாய் சொல்லித் தர வேண்டும் என்பதே என் ஆசை!