Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ செலவில்லாமல் மாடி தோட்ட செடிகளை வளர்க்கலாம்!

செலவில்லாமல் மாடி தோட்ட செடிகளை வளர்க்கலாம்!

செலவில்லாமல் மாடி தோட்ட செடிகளை வளர்க்கலாம்!

செலவில்லாமல் மாடி தோட்ட செடிகளை வளர்க்கலாம்!

PUBLISHED ON : ஜூன் 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
கடந்த ஆறு ஆண்டு களாக, மாடித் தோட்டம் வாயிலாக மூலிகைகள், நாட்டு ரக காய்கறிகள் மற்றும் பூந்தோட்டம் அமைத்து பராமரித்து வரும் செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த நீலா கிருஷ்ணன்:

என் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

'இவை மாதிரியான பிரச்னைகளுக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை விட, மூலிகைகள் வாயிலாக நாமே அந்த பாதிப்புகளை குணப்படுத்த முயற்சி செய்து பார்க்கலாம்' என்று தோன்றியது.

அதற்காக, மூலிகை செடிகளை மட்டும் ஆரம்பத்தில் வளர்க்க ஆரம்பித்தேன்.

செங்கற்றாழை, துளசி, ஓமம், சித்தரத்தை உட்பட பல மூலிகை செடிகள் உள்ளன. அவை வளர்ந்து பலன்கள் கொடுத்ததால், அடுத்த கட்டமாக காய்கறிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

நாட்டு ரகங்களை சேர்ந்த வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட செடிகள் வளர்க்க ஆரம்பித்தேன். தொடர்ந்து பல வகையான கிழங்குகள், மலர்கள் உற்பத்தி செய்ய துவங்கினேன்.

நான் வளர்க்கக் கூடிய செடிகள் வாயிலாக கிடைக்கக் கூடிய விதைகளை மாடி மற்றும் வீட்டுத் தோட்டத்தில் ஆர்வம் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து, 'வீரிய ரகங்களை விட, இது எந்தளவுக்கு சிறப்பானது' என சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

மாடித் தோட்டம் அமைக்க விரும்புவோர், ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் செடிகள் வளர்த்து, அதன் வாயிலாக கிடைக்கும் அனுபவங்களை வைத்து, செடிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகப்படுத்தலாம்.

வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளை மட்க வைத்து, உரம் தயாரிக்கலாம். அந்த உரத்தை பயன்படுத்தியே நல்ல விளைச்சல் எடுக்கலாம்.

மழை, வெயில் எந்த காலமாக இருந்தாலும், மாவு பூச்சிகள் தான் செடிகளை அதிகமாக தாக்கும். பழைய சோற்றை, மூன்று நாட்கள் வரை வைத்திருந்து, அது நல்லா புளிச்ச பின், கரைத்து வடிகட்டி, தெளிந்த நீரை, செடிகள் மீது தெளித்தால், மாவு பூச்சிகள் இறந்து விடும்.

குளிர்ந்த தண்ணீரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தெளிப்பதன் வாயிலாகவும், மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

காய்கறி செடிகள் நன்கு வளர்ந்து, பூ பூக்கும் தருணத்தில் தலா அரை லிட்டர் தேங்காய்ப்பால், மோர், 10 கிராம் பெருங்காயம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து மூன்று நாட்கள் வைத்திருந்து, செடிகள் மேல் தெளித்தால் பூக்கள் உதிராமல் தக்க வைக்கப்படும்.

இதனால் அதிக எண்ணிக்கையில் பிஞ்சுகள் பிடித்து, கூடுதலாக விளைச்சல் கிடைக்கும். இப்படி செலவில்லாமல் நம் வீட்டில் கிடைப்பதை வைத்து, மாடித் தோட்ட செடிகளை நன்கு செழிப்பாக வளர்க்கலாம். தொடர்புக்கு: 72009 30942

*************

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிசினஸ் செய்வதில் ஆத்ம திருப்தி!


'மெய்யான்' என்ற பெயரில் முருங்கையில் டீ, பொடி, முருங்கைப்பூ சூப், முருங்கை- மஞ்சள் நைட் க்ரீம், ஷாம்பூ என மதிப்பு கூட்டல் பொருட்களை தயாரித்து, பிசினஸ் செய்து வரும், சென்னையைச் சேர்ந்த

பரமேஸ்வேரி: நான் பிறந்து, வளர்ந்தது திருநெல்வேலி. வீட்டுக்காரரோட சம்பளத்தில் இரண்டு குழந்தைங்க, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத போது, அவருக்கு உதவி செய்யலாமேன்னு யோசிச்சேன்.

ஆழ்வார்குறிச்சியில் எங்களுக்கொரு தோட்டம் இருந்தது; அந்த தோட்டத்தில் என் மாமனார் முருங்கை பயிர் செய்து வந்தார். அந்த மரங்களில் காய்க்குற முருங்கைக் காய்களை விற்றது போக இலை, பூவையெல்லாம் நாங்க ஒண்ணும் பண்ண மாட்டோம்.அவற்றையெல்லாம் வைத்து ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது தான், இந்த பிசினஸ் ஐடியா வந்தது. -'நாம ஏன் முருங்கையில் டீ தயாரிக்கக் கூடாது?' என தோன்றியது. முருங்கை இலைகளை நிழலில் காய வைத்து, அரைச்சு டீ தயார் செய்தேன்.

அதை கணவர் அலுவலகத்தில் வேலை செய்வோர், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என, பலருக்கு தந்தோம். நல்லா இருக்கு என, மறுபடியும் கேட்க ஆரம்பித்தனர்.

'இதையே ஒரு பிசினசாக பண்ணு'ன்னு கணவர் சப்போர்ட் செய்ய, அரசு மானியம், 3 லட்சம் ரூபாய் கிடைத்தது.மேற்கொண்டு, 5 லட்சம் ரூபாய் போட்டு, சீனாவில் இருந்து டீ டிப்புக்கான, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிஷினை

இறக்குமதி செய்தோம்.

இஞ்சி, துளசி, புதினா, செம்பருத்திப்பூ, எலுமிச்சை பழம்னு நிறைய ப்ளேவரில் டீ டிப் தயாரிக்கிறோம். இந்தியாவில் மட்டு மன்றி, மலேஷியா, லண்டன், அமெரிக்கா, துபாய் என, உலகம் முழுதும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

ஆழ்வார்குறிச்சியில் உள்ள தோட்டத்தையும், பேக்டரியையும் மாமனார் பார்த்துக் கொள்கிறார். அங்கிருந்து எங்கள் தயாரிப்புகளை சென்னைக்கு எடுத்து வந்து பிசினஸ் செய்கிறோம்.

தயாரிப்பு செலவு அதிகபட்சமாக, 100 - 120 ரூபாய் தான் ஆகும். மாதத்திற்கு தோராயமாக, 300 பாக்ஸ் வரை விற்பனையாகும். அந்த வகையில், 35,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

டீ டிப் மட்டுமில்லாமல், முருங்கை இலை பொடி, சூப், முருங்கைப்பூ பொடி, முருங்கை பிசின், முருங்கை விதை பருப்பு பொடி, முருங்கை ஷாம்பூ, முருங்கை

மஞ்சள் நைட் க்ரீம் என முருங்கையில் பல பொருட்கள் தயாரிக்கிறோம். முருங்கையின் ஆரோக்கிய பலன்கள் பற்றி, புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துற மாதிரியான ஒரு பிசினசை செய்வது, ஆத்ம

திருப்தியை கொடுக்கிறது.தொடர்புக்கு: 93845 48610





      Our Apps Available On




      Dinamalar

      Follow us