/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 2.5 ஏக்கரில் உள்ள மீன் குட்டைகளில் ரூ.5.62 லட்சம் லாபம்! 2.5 ஏக்கரில் உள்ள மீன் குட்டைகளில் ரூ.5.62 லட்சம் லாபம்!
2.5 ஏக்கரில் உள்ள மீன் குட்டைகளில் ரூ.5.62 லட்சம் லாபம்!
2.5 ஏக்கரில் உள்ள மீன் குட்டைகளில் ரூ.5.62 லட்சம் லாபம்!
2.5 ஏக்கரில் உள்ள மீன் குட்டைகளில் ரூ.5.62 லட்சம் லாபம்!
PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

மயிலாடுதுறை மாவட்டம், சாமியார் குன்னம் கிராமத்தில் 4 ஏக்கரில் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயி கஜேந்திரன்: எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. என்னோட அப்பாவும், தம்பிகளும் தான் நீண்ட காலமா விவசாயத்தை கவனிச்சுட்டு இருந்தாங்க.
நான், 35 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் வேலை செய்தேன். கொரோனா சமயத்தில் சொந்த ஊருக்கே திரும்பி வந்துட்டேன்.
'சொந்த நிலம் இருக்கு... வேற எந்த தொழிலும் வேண்டாம்; விவசாயத்தை கவனி'ன்னு நண்பர்களும், உறவினர்களும் சொன்னாங்க.
இதனால், 6 ஏக்கர்லயும் நெல் விவசாயம் தான் செய்து வந்தேன். உழைப்புக்கும், முதலீட்டுக்கும் ஏத்த லாபம் கிடைக்கவில்லை.
உபரி வருமானத்துக்கு கூடுதலாக வேறு என்ன செய்யலாம் என்ற தேடலில் இருந்தபோது தான், 'மீனுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கு; குட்டை அமைத்து, மீன் வளர்ப்பில் ஈடுபட்டால், உத்தரவாதமான லாபம் பார்க்கலாம்'னு சொன்னாங்க.
மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கும், விவசாயிகள் உபரி வருமானம் ஈட்டுவதற்காகவும், விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கும் மானிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக, இங்குள்ள கிராமங்களில் மீன் வளர்ப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.
இதனால், மயிலாடுதுறையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்துக்கு சென்று, ஆலோசனை கேட்டேன்.
'உங்க சொந்த பணத்தை முதலீடு செஞ்சு, பண்ணை குட்டை அமைச்சு உரிய ஆவணங்களோடு எங்களை அணுகினால், பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில், 40 சதவீதம் மானியம் பெறலாம்' என, அதிகாரிகள் சொன்னாங்க.
மொத்தம் 1 ஏக்கருக்கு கட்லா, ரோகு, மிர்கால், புல் கெண்டை ரகங்கள் என 3,000 மீன் குஞ்சுகள் விடுவேன். ஒரு மீன் குறைந்தபட்சம் 1 கிலோவில் இருந்து அதிகபட்சம் 1.5 கிலோ எடை இருக்கும். குறைந்தபட்சம் 2.5 டன் மீன்கள் மகசூல் கிடைக்கும். வியாபாரிகள்கிட்ட மொத்த விற்பனையில் 1 கிலோ, 150 ரூபாய் என விற்பனை செய்கிறேன்.
சில்லரை விற்பனையில் 1 கிலோ, 200 ரூபாய் என விற்பனை செய்கிறேன். சராசரியாக 1 கிலோவுக்கு, 170 ரூபாய் வீதம், 2,500 கிலோ மீன்கள் விற்பனை வாயிலாக, 4.25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மீன் குஞ்சுகள், தீவனம், குளம் பராமரிப்பு, மீன் பிடிப்புக்கான ஆள் கூலி உட்பட எல்லா செலவுகளும் போக 1 ஏக்கருக்கு, 2.25 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஆக, 2.5 ஏக்கரில் உள்ள மீன் குட்டைகள் வாயிலாக, ஒரு ஆண்டிற்கு 5.62 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு: 89400 83391.