Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

ADDED : மே 28, 2025 07:05 AM


Google News
மினி மாஸ் விளக்கு எரியுமா?

செட்டிப்பட்டு, திரவுபதி அம்மன் கோவில் எதிரே உள்ள மினி மாஸ் விளக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேல் எரியாமல் உள்ளது.

குமார், செட்டிப்பட்டு.

சுகாதார சீர்கேடு

திருக்கனுார் அரசு பள்ளி அருகே குவிந்துள்ள குப்பையை அகற்றாததால் சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சண்முகம், திருக்கனுார்.

பகலிலும் எரியும் மின் விளக்கு

நோணாங்குப்பம் - அரியாங்கும் சாலையில் பகலில் மின் விலக்கு எரிவதால் மின்சாரம்விரையமாகிறது.

சாமிநாதன், நோனாங்குப்பம்.

விபத்து அபாயம்

புதுச்சேரி நுாறடி சாலை மேம்பாலம் பணிகள் துவங்காமல் உள்ளதால், மேம்பாலத்தில் ஒரு பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜாமணி, புதுச்சேரி.

பத்துக்கண்ணு - வழுதாவூர் சாலை, ராமநாதபுரம் பஸ் நிறுத்தம் சாலை நடுவே உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜா, பத்துக்கண்ணு.

குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?

காமராஜர் நகர் தொகுதி, வெங்கட்டா நகரில், சிறுவர் பூங்காவில் குடிநீர் வசதி இல்லாமல் சிறுவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கல்யாணம், வெங்கட்டா நகர்.

தெருவிளக்கு எரியவில்லை

உழவர்கரை, பசுபொன் நகர், 2 வது குறுக்குத் தெருவில் தெரு விளக்கு எரியவில்லை.

நடராஜன், உழவர்கரை.

முருங்கப்பாக்கம், ஒட்டாம்பாளையம், மேட்டுத் தெருவில் தெரு விளக்கு எரியவில்லை.

ராஜசேகர், முருங்கப்பாக்கம்.

வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்

லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலை, பாரதியார் சாலை திருப்பத்தில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

ராஜேந்திரன், லாஸ்பேட்டை.

குப்பை வண்டி வருவதில்லை

ஜீவானந்தபுரம், அன்னை பிரியதர்ஷினி வீதியில் குப்பை வண்டி சரிவர வராததால் குப்பைகள் தேங்கியுள்ளது.

தினேஷ், ஜீவானந்தபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us