ADDED : ஜூலை 29, 2024 06:33 AM

நிழற்குடையின்றி பயணிகள் அவதி
பாக்கமுடையான்பேட் ஜீவா காலனி பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சூரியகுமார், பாக்கமுடையான்பட்டு.
வேகத்தடை தேவை
மங்கலம், மேல் திருகாஞ்சி மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
துளசிதரன், மேல்திருக்காஞ்சி.
ைஹமாஸ் எரியுமா?
அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியால் விபத்துக்கள் நடந்து வருகிறது.
ரவி, தவளக்குப்பம்.
சுகாதார சீர்கேடு
ரெட்டியார்பாளையம், பொன் நகரில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மதி, ரெட்டியார்பாளையம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
நைனார்மண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரவன், மரப்பாலம்.