ADDED : ஜூலை 13, 2024 05:49 AM
தேரடி வீதியில் ஆக்கிரமிப்பு
முருங்கப்பாக்கம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கண்ணன்,முருங்கப்பாக்கம்.
வில்லியனுார் தேரடி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால், போக்குவரத்து இடையூறாக உள்ளது.
வெங்கடேசன், வில்லியனுார்.
வாய்க்காலில் அடைப்பு
அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு முதல் தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
ஜெமீலா, அரியாங்குப்பம்.
வாகன ஓட்டிகள் அவதி
லாஸ்பேட்டை, ராஜாஜி நகர், 8வது குறுக்கு தெருவில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜெயபாலன். லாஸ்பேட்டை.