ADDED : ஜூலை 11, 2024 06:13 AM
சிக்னல் தேவை
வில்லியனுாரில் நான்கு சாலைகள் சந்திக்கும் கோட்டைமேடு, எம்.ஜி.ஆர்., சிலை, பகுதியில் டிராபிக் சிக்னல் அமைக்க வேண்டும்.
முருகன், வில்லியனுார்.
மரக்கிளை அகற்றப்படுமா?
வில்லியனுார் மூலக்கடை துவங்கி அண்ணாதுரை சிலை வரை சாலையில் சாய்ந்துள்ள மரக்கிளைகளை சரிசெய்ய வேண்டும்.
ரஜினி, வில்லியனுார்.
விபத்து அபாயம்
கடலுார் சாலை பாரதி மில் அருகே சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.
விக்ரமன், முதலியார்பேட்டை.