ADDED : ஜூன் 18, 2024 04:43 AM
வாகன ஓட்டிகள் அவதி
கொம்பாக்கம் - சிவகிரி மெயின் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரவி, கொம்பாக்கம்.
மின் கம்பிகள் மீது மரக்கிளை
பிள்ளையார்குப்பம் - மணப்பட்டு சாலையில் மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்ட மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உமாசங்கர், பிள்ளையார்குப்பம்.
சாலையில் கழிவுநீர்
தட்டாஞ்சாவடி, வெங்கடேஷ்வரா நகர் சோழன் வீதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
சுந்தரமூர்த்தி, தட்டாஞ்சாவடி.
சாலை ஆக்கிரமிப்பு
முருங்கப்பாக்கம் சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், முருங்கப்பாக்கம்.