ADDED : ஜூன் 12, 2024 02:13 AM
குடிநீரில் கழிவுநீர் கலப்பு
உருளையன்பேட்டை கல்வே பங்களா குளக்கரை வீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
சுப்ரமணியன், உருளையன்பேட்டை.
ராஜ்பவன் வைசியாள் வீதியில் உயர் மின் அழுத்தம் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சுமதி, ராஜ்பவன்.
நாய்கள் தொல்லை
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர், 3வது குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணன், ரெயின்போ நகர்.
பள்ளி அருகே கழிவுநீர் தேக்கம்
காமராஜர் நகர் தொகுதி, வினோபா நகர் அரசு பள்ளி அருகே கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
சுகுமார், வினோபா நகர்.