sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா அறிக்கை: ஆண்டாண்டு காலமாகவும் மரபு வழியாகவும், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது பின்பற்றப்படுகிறது. முதல்வர் விஜய் பதவி ஏற்பு விழாவில், மும் மொழி கொள்கைக்கு வழிவகுக்கும் வகையில், தமிழை மூன்றாவது மொழியாக ஆக்கும் மத்திய அரசின் திட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது. த.வெ.க., ஆட்சி பொறுப்பு ஏற்கும் முதல் நாளிலேயே, மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பிச்சுட்டீங்களா... வந்தே மாதரம் தேச பக்தி பாடல்தானே... முதல்ல தேசம், அப்புறம் தான் மாநிலம் என்ற வரிசையில் உங்களுக்கு என்ன பிரச்னை?

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததும் த.வெ.க., தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் சேர்ந்து, ஒன்பது அமைச்சர்கள் என, 10 பேர் பதவி ஏற்றுள்ளனர். தீய சக்தியில், 10 எடுத்து, துாய சக்தியில் கலந்தால் என்ன சக்தி வரும் என்பதை விஜய் தெரிவிக்க வேண்டும்.

விஜயிடம் இருக்கும், 107 துாய சக்திகளில், 10 தீய சக்திகளும் கலந்து எல்லாமே துாய சக்தியா மாறவும் வாய்ப்பிருக்கே!

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட மாவட்டங்களுக்கான தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அறிக்கை: தமிழக மக்கள் அனைவருக்கும் சமமான ஆட்சியை வழங்குவீர்கள் என நம்பிய கோடிக்கணக்கான ஹிந்துக்கள் விஜய்க்கு ஓட்டு போட்டுள்ளனர். உங்கள் கைகளால் தீய சக்திகள் தோற்கடிக்கப்பட்டதற்கு, பல குற்றங்கள் நடந்த பின்னும் போதை பொருட்களுக்கு எதிராக முந்தைய அரசு நடவடிக்கை எடுக்காததும் ஒரு முக்கிய காரணம்.

அதனால் தானே, போதை பொருள் ஒழிப்புக்கு என்று தனிப்படை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு போட்டிருக்காரு!

தமிழக பா.ஜ., விவசாய அணியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: விஜய் பதவி யேற்றதும், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் கையெழுத்திட்டது போல், பட்டிதொட்டியெல்லாம் பரவிக் கிடக்கும் தமிழக அரசின் மதுபான கடைகளுக்கும், முட்டு சந்துகளில் எல்லாம் கொடிகட்டி பறக்கும் சந்துக்கடை மது விற்பனைக்கும் முடிவு கட்டி, தமிழகத்தின் மனித வளத் தையும் சட்டம் - ஒழுங்கையும் காப்பாற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'டாஸ்மாக்'கை இப்போதைக்கு இழுத்து மூடாவிட்டாலும், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையை, விஜய் அரசு எடுக்கும்னு நம்பலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us