sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 05, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2026 03:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் பேச்சு: நடிகர் விஜய், தமிழக மக்களுக்காக தன்னையே தியாகம் செய்துள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருந்து விட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். அதனால் தான், சி.பி.ஐ., வழக்கு, திரைப்படம் தள்ளிப்போவது போன்ற நெருக்கடிகள் அவருக்கு ஏற்படுத்தப்படுகின்றன. விஜய்க்கு இப்போது, 40 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது; வரும் நாட்களில் இது அதிகரிக்கும். சி.பி.ஐ., தணிக்கை வாரியம் எல்லாம் மத்திய அரசின் கையில் தான் இருக்கு... மத்திய பா.ஜ., அரசு, விஜயை தங்களுக்கு போட்டியா நினைக்குதுன்னு இவர் சொல்றது ஏத்துக்கும்படியா இல்லையே!

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: நம் அண்டை நா டான வங்கதேசத்தில், பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்க ள் தாக்கப்பட்டனர்; அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அப்போதெல்லாம், வி.சி., தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூ., தலைவர்களுக்கு தெருவில் இறங்கி போராட தோன்றவில்லை. ஆனால், இந்தியாவுக்கு தொடர்பே இல்லா த, ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு, இவர்கள் தெருவில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற னர். போராட்டம் என்ற பெயரில் வீண் பதற்றத்தை ஏற்படுத்த, தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

இவர் வேற... ஆட்சியில் இல்லை என்றால், தி.மு.க.,வினரும் தெருவில் இறங்கி போராட்டம் பண்ணியிருப்பாங்க!

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: தி.மு.க., கூட்டணியில், சீட் பங்கீடு பேச்சு சுமுகமாக நடக்கிறது; முதல் கட்ட பேச்சு நடந்துள்ளது. எங்கள் கோரிக்கை குறித்து, கட்சி தலைமையிடம் பேசி தெரிவிப்பதாக தி.மு.க., குழுவினர் கூறியுள்ளனர். எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளோம் என்பதை இப்போது கூற முடியாது. எங்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தவில்லை.

அதுவும் சரிதான்... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலா, பேசாம அந்த கட்சியிலயே சேர்ந்துடலாமே!

தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்துள்ளதால், கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ராஜாஜி காலம் துவங்கி, தொடர்ந்து சிலர் தி.மு.க.,வை அழிக்க முயற்சி செய்கின்றனர். அவற்றை முறியடித்து, ஆலமரம் போல தி.மு.க., வளர்ந்துள்ளது.

ராஜாஜி, காங்கிரசில் தானே இருந்தார்... தங்களை அழிக்க பார்க்கிறதா, கூடுதல் தொகுதிகள் கேட்டு குடைச்சல் தரும் காங்கிரசை தான் இவங்க சாடுறாங்களோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us