sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : மார் 04, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2026 01:40 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேச்சு: ஓலை குடிசையில் பிறந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான், 2011, 2016, 2021 என, மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றேன். 2021ல் எனக்கு அரசு கொறடா பதவி வழங்கப்பட்டது; மூன்றரை ஆண்டுகள் அப்பதவியில் இருந்தேன். பின், எனக்கு அமைச்சர் பதவி அறிவித்தபோது, ஏதோ ஒரு துறை தருவர் என்று இருந்தேன்.

ஆனால், எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றனரோ, அந்த ஜாதியில் பிறந்த எனக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனக்கு அமைச்சர் பதவி வழங்கி, சமூக நீதியை காப்பாற்றியவர் முதல்வர் ஸ்டாலின். வழக்கில் சிக்கி, உயர் கல்வித் துறை அமைச்சர் பதவியை பொன்முடி இழந்ததால், இவருக்கு அந்த பதவியை குடுத்தாங்க... இதுல, சமூக நீதி எல்லாம் எங்கிருந்து வந்துச்சு?

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'மற்ற மாநிலங்களுடன் போட்டி என்ற நிலையை தாண்டி, உலக நாடுகளுடன் தமிழகம் போட்டி போடுகிறது. இதற்கெல்லாம் காரணம், கல்வியில் தமிழகம் செலுத்தும் கவனம் தான்' என, முதல்வர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட படித்தவர்களை, ஆட்சிக்காலம் முழுதும் போராட வைக்கும் ஒரே அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை.

இனியும் இவங்க போராடி புண்ணியமில்லை... சின்ன ஓய்வு எடுத்துக்கிட்டு, தேர்தல் முடிஞ்சு புதிய அரசு அமைந்ததும் போராடலாமே! தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: உலகின் அசைக்க முடியாத வல்லரசாக திகழும் அமெரிக்கா தான், உலகில் அதிகமாக கடன் வாங்கியுள்ள முதல் நாடாக இருக்கிறது. ஒரு நாடு அனைத்து துறைகளிலும், தன்னை முன்னணியில் நிறுத்த பெறப்படும் மூலதன செலவுகளுக்கான கடன் என்பது, அந்த நாட்டுக்கான வளர்ச்சிக்கு உதவுவதோடு, அது மறைமுக சொத்தாகவும் உருவெடுக்கும்.

வளர்ச்சி திட்டங்களுக்கு கடன் வாங்குவதில் தவறில்லை... ஆனா, இலவசங்களை வாரி வழங்க கடனுக்கு மேல கடன்களை வாங்கிட்டே இருந்தா, நாடு திவாலாகிடும்! தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தமிழகத்தில் கடவுள்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை விரும்பவில்லை' என, தி.மு.க., அமைப்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடவுள்களை விரும்பாதவர்கள், கடவுள்களை கேலி செய்தவர்கள், இப்போது இப்படி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தான் திராவிட மாடல் முடிவின் துவக்கம்.

எப்படியோ, கடவுள்னு ஒருத்தர் இருப்பதை ஒப்புக்கிட்டாங்க அல்லவா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us